ஆதிரையின் வருத்தம்… அன்னத்தின் முடிவு… ஆனந்தியின் குழப்பம்… நந்தினியின் தயக்கம்…

Sun serials: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி சூப்பர் ஹிட் சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டுகளுக்கான புரோமோ அப்டேட்ஸ். மருமகள் ஆதிரை நம் கார்த்திக்கிற்கு உதவி செய்தே ஆகணும். இந்த கடனை நான் எப்படியாவது அடைச்சிடறேன் என்கிறார். மனோகரியின் மகள் ஆதிரை அக்காவிற்கு கால் செய்து தருகிறேன் நீங்க பேசுங்கப்பா எனக் கூறுகிறார். அப்பா தடுத்தும் அவர் கால் செய்ய மனோகரி வந்து போனை பிடுங்கி விடுகிறார். பிரபுவிடம் ஆதிரை, இந்த வீட்டுக்கு மருமகளா […]

;

Published On 2025-03-18 15:59 IST   |   Updated On 2025-03-18 15:59:00 IST

Sun serials: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி சூப்பர் ஹிட் சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டுகளுக்கான புரோமோ அப்டேட்ஸ்.

மருமகள்

ஆதிரை நம் கார்த்திக்கிற்கு உதவி செய்தே ஆகணும். இந்த கடனை நான் எப்படியாவது அடைச்சிடறேன் என்கிறார். மனோகரியின் மகள் ஆதிரை அக்காவிற்கு கால் செய்து தருகிறேன் நீங்க பேசுங்கப்பா எனக் கூறுகிறார்.

அப்பா தடுத்தும் அவர் கால் செய்ய மனோகரி வந்து போனை பிடுங்கி விடுகிறார். பிரபுவிடம் ஆதிரை, இந்த வீட்டுக்கு மருமகளா வந்து எங்க அப்பாவோட ஒரே சந்தோஷத்தையும் நிம்மதியையும் காலி செஞ்சிட்டேனே என்கிறார்.

அன்னம்

குணா அன்னத்தின் நிச்சயதார்த்தம் ரத்தாகணும். ஏதாவது பிரச்சனை பண்ணி இதை நிறுத்திடு என அவருடைய அப்பாவிற்கு ஐடியா கொடுத்து செல்கிறார். மாமா தன்னுடைய குடும்பத்தில், அன்னைக்கு எல்லாருக்கும் முன்னாடி என் பையன மாப்பிள்ளையா கொடுக்கிறேன் சொன்னது அவ மேல வச்சிருந்த நம்பிக்கையில என்கிறார்.

அன்னம் தன்னுடைய அப்பா மற்றும் சித்தியிடம், வீட்டை என்னுடைய தங்கை பேருக்கு எழுதி வைக்க இருப்பதாக கூறுகிறார்.

சிங்கப் பெண்ணே

மகேஷ் அன்புவிடம், எனக்காக நீ ஆனந்திக்கிட்ட பேசி அவளை டெரஸுக்கு வரச் சொல்றீயா எனக் கேட்கிறார். அன்பு ஆனந்தியிடம், இந்த விஷயத்தை அவர் சுயநினைவு இல்லாதப்ப கூட பேசுனாரா பேசலையே அவரை தப்பா பேசாதீங்க என்கிறார்.

மகேஷ் உனக்கு துணையா யாரோ வரணும் தானே. அது ஏன் நானா இருக்க கூடாது என அனந்தியிடம் கூறுகிறார்.

மூன்று முடிச்சு

நான் சொன்னா சொன்னதுதான். இதான் என் கடைசி வார்னிங். நகை இப்போ வரணும் என்கிறார் சூர்யா. நந்தினியிடம் நீ ஏன் இவங்களை நம்புன எனக் கேட்கிறார்.

நான் எங்க நம்புனேன். இதெல்லாம் அய்யா செஞ்ச ஏற்பாடு என்கிறார். மாதவி என்னம்மா போலீஸ் வரும்னு சொல்றான் எனக் கேட்க மிலிட்டரியே வரட்டும் ஒன்னும் பண்ண முடியாது என்கிறார் சுந்தரவள்ளி.

Tags:    

Similar News