Pandian Stores2: திரும்பி கிடைத்த ராஜியின் நகை… கதிரின் பிசினஸுக்கு நடக்கும் அடுத்த பிரச்னை!
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
செந்திலை ஆபிஸில் விட்டுட்டு மீனாவின் அப்பா இனிமே நீங்க மேல வளரணும். அதுக்கு என்ன ஆனாலும் நான் உதவி செய்றேன் என்கிறார். பின்னர் மீனா கிளம்ப கதிர் இன்னைக்கு ஃபுல்லா நான் உன்கூட ஆபிஸில் இருக்கேன் என்கிறார்.
அவர்கள் கிளம்பியதும் கதிர், சரவணன் மற்றும் பழனிக்கு வீடியோ கால் செய்து செந்தில் ஆபிஸை காட்டி சந்தோஷப்படுகிறார். பின்னர் செந்தில், சரவணன் மற்றும் பழனியிடம் பேசாமல் முதலில் கூச்சப்படுகிறார். பின்னர் மூவரும் பேசி சிரித்துக்கொண்டு இருக்கின்றனர்.
கதிர் ஆபிஸை சுத்திக்காட்டி விட்டு செந்திலிடம் ஒருநாள் அலுவலகத்துக்கு வரேன் என்கிறார். அப்பா வரலையா என செந்தில் கேட்க அவர் இன்னும் வரலை. நீ அவரை நினைச்சு வருத்தப்படாத. நீ கல்யாணம் செஞ்சிட்டு வந்தப்பையே ஒரு வாரம் அவர் கோபம் தாங்கலை. இதெல்லாம் ஒன்னுமே இல்லை என அறிவுரை சொல்கிறார்.
வீட்டில் கதிர் உட்கார்ந்து இருக்க ராஜி செந்தில் மாமா ஹேப்பியா எனக் கேட்க எல்லாரும் ஹேப்பியோ ஹேப்பி என்கிரார். மாமா செட்டில் ஆனது சந்தோஷம் தான். ஆனா காசு விஷயம் தெரியாம இருந்தா நல்லா இருந்து இருக்கும் என்கிறார். கதிர் இந்த விஷயம் இப்பையே தெரிஞ்சது நல்லது என்கிறார்.
அது சரிதான் என்கிறார் ராஜி. பின்னர் அடுத்து நீதான் என்கிறார். உன்னையும் இப்படி குடும்பமா வந்து விடணும் எனக் கூற என்னை யாரும் விட வேண்டாம். நான் ஜீப்பில் போவேன் என்கிறார். பின்னர் போலீஸிடம் இருந்து கால் வர என்ன போலீஸ் வேலையை பத்தி பேசுனா போலீசிடம் இருந்து கால் வருது என்கிறார்.
யார் கூப்பிடுறா எனக் கேட்க நகை விஷயமா கம்ப்ளையண்ட் கொடுத்து இருந்தோம்ல அங்கிருந்துதான் என்கிறார் கதிர். போனை அட்டர்ண் பண்ணி பேசு எனக் கேட்க கதிர் பேசுகிறார். அந்த போலீஸ் பாதி நகையை மீட்டாச்சு. வந்து அடையாளம் காட்டி வாங்கிட்டு போங்க என்கிறார்.
இருவரும் போலீஸ் நிலையம் வர இவன் உன் பிரண்ட்டா எனக் கேட்க கதிர் ஆமாம். என்ன ஆச்சு எனக் கேட்க இவன் இன்னொரு பொண்ணை ஏமாத்தி அவளிடம் இருந்து நகையை திருடிட்டு போயிருக்கான். ஓசூரில் சந்தேக கேஸில் மாட்டி இருக்கான் என்கிறார்.
பின்னர் நகையை எடுத்து கொடுக்க ராஜி அடையாளம் பார்த்து தன் நகையை அடையாளம் காட்டுகிறார். மீதி குறித்து கதிர் கேட்க சீக்கிரம் மீட்டுடலாம் என்கிறார். கதிர் அவருடைய லவ் குறித்து கேட்க நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும். ஆனா மண்ட கோளாறு பிடிச்சிக்கும்.
நாமே போய் படுகுழியில் விழுவோம் என்கிறார். அது மாதிரி தான் இந்த கண்ணன் என்கிறார். சரி பழகிய பிறகும் தெரியலையா எனக் கேட்க அவன் அப்படி பேசுவான் என்கிறார். கவிதை சொல்லுவான் எனக் கூற கதிர் அப்படியா ஒரு சாம்பிள் எடுத்துவிடு எனக் கூறுகிறார்.
ராஜி ஒரு கவிதை சொல்ல கதிர் விழுந்து சிரிக்கிறார். அவனை வசைப்பாடி திட்டிக்கொண்டு இருக்கிறார் ராஜி. பின்னர் பேங்கில் லோனுக்காக இருவரும் கிளம்பி செல்கின்றனர். மேனேஜரை பார்க்க அவர் சொத்து இருக்கா எனக் கேட்க கதிர் அமைதியாகி விடுகிறார்.
நண்பர்கள் யாரிடமாச்சும் இருக்கா எனக் கேட்க இருக்கு ஆனா அவங்க சூரிட்டி தர மாட்டாங்களே என்கிறார். உங்கள மாதிரி நிறைய யங்ஸ்டர் வராங்க. ஆனா சூரிட்டி இல்லாம பேங்கில் எந்த லோனும் தரமாட்டாங்க என்கிறார்.