Pandian Stores2: கைது செய்யப்பட்ட குமரவேல்… சக்திவேல் போடும் சபதம்… இதெல்லாம் தேவையா?
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
குமரவேல் கைது செய்ய அவர் வீட்டார் அதிர்ச்சியில் போலீஸாரிடம் கெஞ்சி கேட்டு கொண்டு இருக்கின்றனர். இந்த சத்தம் கேட்டு அரசி வந்து ஜன்னலில் பார்க்க ராஜி மற்றும் கோமதி வாசலில் நிற்கின்றனர். குமாரை இழுத்து செல்லும் போலீஸ் ஜீப்பில் அழைத்து செல்கின்றனர்.
குமார் அம்மா, அப்பத்தா அழுது கொண்டு இருக்க சக்திவேல் கோபமாக இன்னும் ஒரு மணி நேரத்தில் என்னுடைய பையனை வெளியில் அழைத்து வருகிறேன் என சபதம் போட்டுவிட்டு செல்கிறார். ராஜி வருத்தமாக ரூமில் உட்கார்ந்து இருக்க அவருக்கு ஆறுதல் சொல்லி கொண்டு இருக்கிறார் கதிர்.
ராஜி எனக்கு குமார் நினைச்சு கவலை இல்ல. அம்மா, அப்பத்தா நினைச்சு தான். அவங்க எவ்வளோ அழுதாங்க அதான் என்கிறார். சரியாகிடும் எனக் கூறும் கதிர், ராஜியிடம் நகையை கொண்டு கொடுத்து விடு என்கிறார். இப்போ கொடுத்தா இன்னும் பிரச்னை செய்வாங்க. குமார் பிரச்னை முடிந்தவுடன் கொடுக்கலாம் என்கிறார்.
பின்னர் பாண்டியன் கடையில் இருக்கும் போது கதிர் தொடங்க இருக்கும் டிராவல்ஸ் பிசினஸ் குறித்து சரவணன் சொல்லிக்கொண்டு இருக்கிறார். உங்களிடம் கேட்க பயம், ஆனா அவனா முன்னேற ஆசையில் லோனுக்கு கேட்டுக்கொண்டு இருக்கான் என்கிறார்.
சரியென கூறும் பாண்டியன், நீ போய் குடவுனில் இருக்கும் பொருள்களை எடுத்து வந்து அடுக்கி வையுங்க. பிடிச்சா செய்யுங்க. நான் சொன்னேனு பயந்துட்டு செய்ய வேண்டாம் எனக் கூறிவிட்டு பாண்டியன் வெளி வேலையாக செல்கிறார்.
சக்திவேல் வீட்டில் குமார் அம்மா அழுதுக்கொண்டு இருக்க சக்திவேல், முத்துவேல் வருகின்றனர். குமார் எங்கே எனக் கேட்க அவனுக்கு ஜாமீன் கிடைக்கலை. கேஸ் நடத்திதான் அழைச்சிட்டு வர முடியும் என்கிறார். இதில் பெண்கள் அழுகின்றனர்.
சக்திவேல் கடுப்பில் முத்துவேலையும் திட்டுகிறார். கல்யாணம் செஞ்சி வச்சிட்டாரு. அது போலவே அழைச்சிட்டு வந்துவிடுவாரு என நக்கலாக பேசுகிறார். அதுமட்டுமல்லாமல் பாண்டியன் குடும்பத்தை நடு தெருவில் நிற்க வைப்பேன் என்கிறார்.
வீட்டில் சரவணன் வந்து சாப்பிட உட்காருகிறார். அரசி சாப்பிட்டாலா எனக் கேட்க இல்லை என்கிறார் கோமதி. கவலையாக உட்கார்ந்து இருக்கும் அரசியை அழைச்சிட்டு வரும் சரவணன் ஊட்டிவிட்டு சாப்பிட வைத்துவிட்டு செல்கிறார்.