Siragadikka Aasai: அருணை கல்யாணம் செய்துக்கொண்ட சீதா… முத்து எடுத்த திடீர் முடிவால் கலங்கி நிற்கும் மீனா!

By :  AKHILAN
Published On 2025-07-10 08:54 IST   |   Updated On 2025-07-10 08:54:00 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்து தொகுப்புகள்.

சீதா அருணிடம் சொல்லாமல் சென்றதால் அவர் கோபப்பட்டு இனி இந்த கல்யாணம் நடக்குமா என எனக்கு தெரியவில்லை என சத்தம் போடுகிறார். ரவி, இந்த பிரச்னைக்கு காரணம் நீங்க தானே என்கிறார். அத பேசுற நேரமா இது என்கிறார் அருண்.

ஒருகட்டத்தில் அருண் கிளம்ப பார்க்க அண்ணாமலை சீதாவை கல்யாணம் செய்துவிட்டீர்கள். இப்பொழுது கழட்டி விட்டுட்டு போறது நியாயமே இல்லை. எல்லாத்தலையும் அவசரமா தான் முடிவு எடுப்பீங்களா என கேட்க அருண் அமைதியாகிறார்.

அந்த நேரத்தில் சீதா மற்றும் மீனா மண்டபத்திற்கு வருகின்றனர். முழு போதையில் முத்துவை செல்வம் கை தாங்கலாக அழைத்து வருகிறார். எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்து தடுமாற வர போலீஸார் என்ன குடிச்சிட்டு வந்து இருக்கான் என பேசிக்கொள்கின்றனர். 

 

சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கலாம் எனப் பேச அருண் மற்றும் சீதா மேடையில் உட்காருகின்றனர். ஐயர் மந்திரம் சொல்ல சீதா கழுத்தில் தாலி கட்டி விடுகிறார் அருண். எல்லாரும் ஆசீர்வாதம் செய்ய முத்துவை அழைக்கிறார் மீனா.

என்னால் உன் தங்கச்சி அழ கூடாதுனு தான் இங்க வந்தேன். இனிமேல் எனக்கும் இந்த குடும்பத்துக்கும் சம்மந்தமே இல்ல. நான் உன் வீட்டுக்கு வர மாட்டேன். இனி நீயும் என் வீட்டுக்கு வரக்கூடாது என சத்தமாக சொல்லிவிட்டு செல்கிறார்.

மீனா கலங்கி நிற்கிறார். வீட்டில் மனோஜ் அப்பா அவனால ஒரே அவமானமா போச்சு. இனி வீட்டுக்குள் விடாதீங்க என்கிறார். விஜயாவும் திட்ட ரோகிணி ஆமா எல்லாரும் நம்ம குடும்பத்தை ஒரு மாதிரி பாத்தாங்க என்கிறார். அண்ணாமலை முத்துவுக்கு ஆதரவாக பேசுகிறார். 

 

முத்து தடுமாறிக்கொண்டே வீட்டுக்குள் வர அவர் அண்ணாமலை முன் நின்று திட்டுங்கப்பா என்கிறார். பின்னர் ரோகிணி, ரவி என எல்லாரிடமும் இதே டயலாக்கை சொல்ல எல்லாரும் ஒன்னும் சொல்ல முடியாமல் பார்த்து கொண்டு நிற்கின்றனர்.

Tags:    

Similar News