Siragadikka Aasai: ஓவர் குஷியில் இருக்கும் ரோகிணி… மீனாக்கு பதில் வந்த புதிய ஆள்!

By :  AKHILAN
Published On 2025-07-15 10:03 IST   |   Updated On 2025-07-15 10:03:00 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

மீனா முத்துவுக்கு சாப்பாடு கொடுத்து இருக்க அதை திறந்து பார்க்க மீனாவே அருகில் இருப்பது போல முத்துவிற்கு தோன்றுகிறது. கவலையுடன் அழுதுக்கிட்டே சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் முத்து.

பின்னர் மீனா தன்னுடன் பூ கட்டுபவர்களுடன் நிற்க அங்கு முத்து வருகிறார். ஒருவர் பார்க்கும் போது இன்னொருவர் பார்க்காமல் இருக்க அங்கிருக்கும் தோழிகள் மீனாவை கலாய்க்கின்றனர். முத்துவும் மீனாவை கலாய்த்து கொண்டு இருக்கிறார்.

பின்னர் எல்லாரையும் காரில் அழைத்து செல்ல மீனா பின் சீட்டில் அமர்ந்து இருக்கிறார். முத்து ஏன் மீனாவுடன் சண்டையா எனக் கேட்க அவர் எல்லா தப்பும் செஞ்சிட்டு கடைசியில் என்னை தானே எல்லாரும் குற்றம் சொல்லிடுவாங்க என்கிறார்.

அப்படி இல்லப்பா. உன்னை கட்டிக்கிட்டதுக்கு மீனா தான் கொடுத்து வச்சி இருக்கணும். நீ இளகுன மனசு என முத்துவுக்கு சப்போர்ட் செய்ய மீனா அந்த பெண்ணை இடிக்கிறார். அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிவிட்டு மீனாவை பேசிவிட்டு வருமாறு செல்ல மீனா ஒன்றும் சொல்லாமல் செல்கிறார்.

பின்னர் ஷோரூமில் ரோகிணி மற்றும் மனோஜ் ஒரே இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு வந்து குடிக்க ரொமான்டிக்கா இருக்கு என நினைக்கிறார் ரோகிணி. ஆனால் இளநீர் 80 ரூபாய் என்பதால் ஷாக்காகிட்டேன். அதன் ஒன்னு வாங்கி இரண்டு ஸ்ட்ரா வாங்கிட்டு வந்தேன் என்கிறார். 

 

அப்போ இருவர் வர வேலை தேடி வந்து இருப்பதாக சொல்கிறார்கள். பெயர் ராஜா, ராணி எனக் கூற மனோஜ், ரோகிணி சிரித்து கொள்கின்றனர். ஷோரூமிலே தங்கி வேலை செய்வதாக சொல்ல முதலில் ஒப்புக்கொள்ளும் ரோகிணி அவர்களுக்கு வேலை கொடுக்கின்றார்.

பின்னர் ரோகிணி அந்த பெண்ணை நம்ம வீட்டுக்கு சமைக்க அழைத்து செல்லலாம் என முடிவு செய்கிறார். மீனா இல்லாததால் தன்னை வேலைக்காரி ஆக்கி விடுவார்கள் என்பதால் அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் எனக் கூற மனோஜும் ஒப்புக்கொள்கிறார்.

வீட்டிற்கு வந்து எல்லாரிடமும் சொல்ல சரியென விஜயா சம்மதிக்கிறார். ரோகிணி அந்த சமையல்கட்டிற்கு அழைத்து சென்று பொங்கல் வைக்க சொல்ல அவருடம் அதற்கான வேலைகளில் இறங்குகிறார்.

Tags:    

Similar News