Siragadikka aasai: ரோகிணி பிள்ள அப்படியே இருக்கு… மீனாவிடம் பொய் சொல்லி சிக்கும் கிரிஷ்!
Siragadikka aasai: சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
விஜயா எதுக்கு அவங்களை விட்ட எனக் கேட்க பின்ன என்ன செய்றது என்கிறார். அதுக்கு யார் காரணமா இருப்பாங்க எனக் கேட்க திலீபனா தான் இருப்பான் என்கிறார். அவங்க வீட்டிலேந்து பிரச்னை வந்தா என்ன செய்றது எனக் கேட்க அதெல்லாம் வரமாட்டாங்க என்கிறார் பார்வதி.
மீனா ரோகிணியின் அம்மாவை பார்க்க கிரிஷை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வருகிறார். அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் ரோகிணியின் அம்மா என் மகளை இப்போ வரச்சொல்ல முடியாது. இப்போது தான் வெளிநாடு போய் இருக்காள்.
அதான் கிரிஷை என்னுடைய சொந்தக்காரங்க வீட்டில் விடலாம் என இருக்கேன் எனக் கேட்கிறார். ஆனால் முத்து இல்ல கிரிஷுக்கு எங்க வீடு ரொம்ப பிடிச்சு இருக்கு. அவன் எங்க கூடவே இருக்கட்டும் என கிரிஷிடமும் கேட்க அவரும் சரி சொல்கிறார்.
இதை ஒட்டுக்கேட்கும் ரோகிணி கடுப்பாகி விடுகிறார். பின்னர் பில் வர முத்து அதை கட்டிவிட்டு தன் நம்பரை கொடுத்திருப்பதாக சொல்லிவிட்டு கிரிஷை அழைத்துக்கொண்டு செல்கிறார். பின்னர் ரோகிணி அவர் அம்மாவை வந்து திட்டுகிறார்.
நீ அவங்களிடம் கிரிஷ் பத்திய உண்மையை சொல்லு. முதலில் கஷ்டமா தான் இருக்கும். அப்புறம் புரிஞ்சிப்பாங்க எனக் கேட்க ரோகிணி என் வாழ்க்கையை மொத்தமா அழிக்க நினைக்காத எனத் திட்டிவிட்டு காசை கொடுத்துவிட்டு செல்கிறார்.
ஸ்ருதி மற்றும் ரவி பேசிக்கொண்டு இருக்க எப்போ ரெஸ்டாரெண்ட்டுக்கு வரப்போற என ஸ்ருதி கேட்க ரவி அதற்கு நக்கலாக பதில் சொல்கிறார். உனக்கு இன்னும் 10 நாள் தான் டைம் அதுக்குள்ள நீ நம்ம ரெஸ்டாரெண்டுக்கு வரணும் என்கிறார்.
இல்லனா என்ன நீ செய்வ எனக் கேட்க அந்த முடிவை நாள் முடிஞ்சதும் சொல்றேன் என்கிறார் ஸ்ருதி. ரோகிணி வித்யாவிடம் மன்னிப்பு கேட்டு உதவி கேட்க அவர் நான் ஊரில் இல்லை. வர ஒருவாரம் ஆகும் என்கிறார். மறுநாள் இரவும் கிரிஷ் ரோகிணியுடன் படுக்கிறேன் என வர அவர் முதலில் அமைதியாக அங்க போய் படுக்க சொல்கிறார்.
ஆனால் கிரிஷ் தொடர்ந்து அடம் பிடிக்க அந்த நேரத்தில் மீனாவும் எழுந்து விட ரோகிணி கோபத்தில் அடித்து விட மீனா வந்து கிரிஷை இழுத்து ரோகிணியை திட்டுகிறார். பதறும் ரோகிணி நான் அடிக்கவில்லை. இவன் தான் பாட்டியிடம் போகணும் என அழுததாக நான் தோல் தொட்டு சமாதானம் செய்தேன் என்கிறார்.
பின்னர் முத்துவும் வந்துவிட கிரிஷை ரோகிணி அடித்ததாக சொல்ல ஆனால் கிரிஷ் அவங்க அடிக்கவில்லை என்கிறார். ரோகிணி மீனாவை திட்டிவிட்டு போய் விடுகிறார். மீனா கிரிஷிடம் வீட்டுக்கு போக கேட்டியா எனக் கூற இல்ல நான் இங்க தான் இருப்பேன் என மாற்றி சொல்ல மீனா - முத்து யோசிக்கின்றனர்.