சுந்தர் சியை சந்தோஷத்தில் ஆழ்த்திய அரண்மனை 4!.. இதுவரை இத்தனை கோடி கல்லா கட்டியிருக்கா?..

அரண்மனை 4 திரைப்படத்தை கடந்த ஒன்றரை வருடமாக கஷ்டப்பட்டு எடுத்து தனது ஒட்டுமொத்த உழைப்பையும் சுந்தர் சி கொட்டி வந்த நிலையில், அதற்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது என்கின்றனர். மற்ற ஹீரோக்களை நம்பி சுந்தர் சி படங்களை இயக்கி வந்தால் அதெல்லாம் ஃபிளாப் ஆகி அவரை கடுப்பாக்கி வந்த நிலையில், இந்த படத்தில் எந்தவொரு ஹீரோவையும் நம்பாமல் தன்னை மட்டுமே முழுசா நம்பி அவர் இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார்.
வறண்டு கடந்த தமிழ் சினிமாவுக்கு தமன்னாவையும் ராஷி கன்னாவையும் காட்டியே படத்தை வெற்றிப் படமாக மாற்றியுள்ளார் சுந்தர் சி. முதல் நாளில் இந்த அரண்மனை படமும் பழைய அரண்மனை படங்கள் போலத்தான் கிரிஞ்சாக இருக்கும் என நினைத்து ரசிகர்கள் தியேட்டருக்கு போகவில்லை.
இதையும் படிங்க: ரஜினி கமலைத் தாண்டி பாலசந்தருக்கு பிடித்த நடிகர்! இவர யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க
முதல் நாளில் சுமார் 4 கோடி ரூபாய் வசூல் செய்த அரண்மனை 4 திரைப்படம் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் முதல் ஐந்து நாட்களில் தற்போது அதிகபட்சமாக 30 கோடி ரூபாய் வசூலை உலகம் முழுவதும் அரண்மனை 4 திரைப்படம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஷ்பூ தயாரிப்பில் சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 படத்தில் காமெடி காட்சிகளை குறைத்துவிட்டு ஹாரர் காட்சிகளை முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியில் போதுமான அளவுக்கு வைத்து மிரட்டியுள்ளார் சுந்தர் சி. அதுதாங்க இந்த படத்துக்கு வெற்றிக்கான மந்திரமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: லால் சலாம் வசூல் இத்தனை கோடியா?.. உருட்டுனாலும் ஒரு நியாயம் வேணாமாடா.. சிக்கிய ரஜினி ரசிகர்!..
ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் வெளியான பாடல்கள் மற்றும் படத்துக்கு அவர் இசையமைத்த பின்னணி இசை என அனைத்துமே மிரட்டல் ரகமாக உள்ளது. மேலும், கூடுதலாக தமன்னாவையும் ராஷி கன்னாவையும் கவர்ச்சி உடையில் ரசிகர்கள் பார்க்கட்டும் என கடைசியாக போட்ட அச்சச்சோ பாடல் முடியும் வரை தியேட்டரில் ரசிகர்கள் இருப்பதால் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என்கின்றனர்.
முதல் காட்சியிலேயே படகு சென்று கொண்டிருக்கும் இளம்பெண் உடம்புக்குள் பாக் பேய் நுழைந்து மீனை கடித்து தின்னும் காட்சியிலேயே படம் பாஸ் ஆகிவிட்டது. ஒவ்வொரு சீனிலும் பேயை காட்டும் போதெல்லாம் தியேட்டரில் அலறல் சத்தமும் சிரிப்பு சத்தமும் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து மக்கள் படத்துக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அந்த நடிகருடன் ஷூட்டிங்!.. எம்.ஜி.ஆருக்கே அல்வா கொடுத்த சரோஜாதேவி!.. நடந்தது இதுதான்!..