கோலிவுட்டில் மோசமாக விமர்சிக்கப்பட்ட அட்லீ… ஒரே படத்தில் தூக்கி வைத்து கொண்டாடும் பாலிவுட்…
Atlee: தமிழ்சினிமாவில் லோகேஷ் கனகராஜை போலவே எடுத்த 5 படங்களுமெ நல்ல வசூல் கொடுத்தாலும் அட்லீயை இன்னும் மோசமாக தான் ரசிகர்கள் விமர்சித்து கொண்டு இருக்கின்றனர். அப்படி அவர் தொலைத்ததை பாலிவுட்டில் போய் தட்டி தூக்கி இருக்கிறார் என பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்து இருக்கிறார்.
அட்லீ ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர். ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. ராஜா ராணியை மௌன ராகம் படத்தின் காப்பி என்றனர்.
இதையும் படிங்க: ‘தல’ன்னா அது அஜீத் மட்டும்தான்… தைரியமாக சொன்ன அந்த பிரபலம் யார் தெரியுமா?..
நண்பன் திரைப்படத்தில் ஏற்பட்ட பழக்கத்தில் விஜயிடம் அடுத்து கதை சொல்லுகிறார். அப்படி உருவானது தான் தெறி திரைப்படம். படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. வசூலையும் குவித்தது. ஆனால் அப்போதும் அட்லீயை விமர்சித்தவர்கள் தான் அதிகம். சத்ரியன் படத்தின் காப்பியாக தான் உருவாகி இருப்பதாக கூறினர்.
அதை தொடர்ந்து, மெர்சல் படத்தினை இயக்கினார் அட்லீ. அப்படத்தில் விஜய் அப்பா இரண்டு மகன்கள் என முதல்முறையாக மூன்று வேடங்களில் தோன்றினார். படம் வெளியாகி வசூலை சக்கை போடு போட்டது. ஆனால் இந்த இடத்திலும் அட்லீயை அசிங்கப்படுத்திய ரசிகர்கள் தான் அதிகம். அதிலும் கமல்ஹாசன் இந்த குழுவை அழைத்து பாராட்டி இருந்தார்.
அந்த படங்கள் ரிலீஸானது. கமல் அட்லீயை விஜயை அருகில் நிற்க வைத்து இருக்க அருகில் அபூர்வ சகோதரர்கள் போஸ்டர் ஓட்டப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் மெர்சல் படத்தினை ரசிகர்கள் இந்த படத்தினை வைத்து தான் கலாய்த்து வந்தனர். இதையே கமலும் செய்தார். அட்லீ தான் விஜய் அண்ணா படங்களை கஷ்டப்பட்டு தான் எடுப்பதாக கூறி இருப்பார்.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரகுமானின் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா?.. தோட்டக்காரரிடம் கண்டிஷன் போட்ட இசைப்புயல்!..
ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்தனர். அதில்லாமல் அவர் மீது இருக்கும் உருவகேலி ரொம்ப அதிகம். காமெடியாக பேசும் ஒரு நடிகர் தன்னுடைய நண்பர் ஒருவரை சந்திக்கிறார். அவர் படம் பார்க்க போய் வந்ததாக கூற இயக்குனர் யார் எனக் கேட்கிறார். அட்லீ எனக் கூறியவுடன் கோயிலில் செருப்பு டோக்கன் போட்டு உட்கார்ந்து இருப்பவர் மாதிரி இருப்பாரே அவரா என்றாராம்.
இத்தனை கேவலங்களை சந்தித்த அட்லீ பாலிவுட்டின் கிங் ஷாருக்கானை வைத்து இயக்கிய திரைப்படம் ஜவான். அப்படத்தினை தமிழ் ரசிகர்கள் வழக்கம் போல ரமணா படத்தின் காப்பி என கலாய்த்தனர். ஆனால் இந்தி திரையுலகையே தூக்கி நிறுத்திய ஜவானை இந்தி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனால் அட்லீக்கும் அங்கு மவுஸ் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. அவருடைய ஆறாவது திரைப்படம் தெலுங்கு திரையுலகை மாஸ் காட்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னர் தளபதி69 திரைப்படத்தினை அட்லீ கையில் விஜய் கொடுக்க ஆசையில் இருப்பதாகவும் ஒரு தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதல் மன்னன் படத்தில் நாயகி என்னை கொடுமைப்படுத்தினார்… சரண் சொன்ன ஷாக்கிங் தகவல்