ரஜினி படத்துக்கு திரைக்கதை எழுதிய பிரபலத்துக்கு சம்பளத்தை டபுளாக கொடுத்த ஏவிஎம்!
‘ஏவிஎம்’ நிறுவனம் தயாரித்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் நடித்தார் ரஜினி.

நம்ம கோலிவுட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் – இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் காம்பினேஷனில் 1984-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் ‘நல்லவனுக்கு நல்லவன்’.
இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ராதிகா சரத்குமார் நடித்திருந்தார். ‘ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன் இப்படத்தை தயாரித்தனர்.

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படம் குறித்து பேசுகையில் “ஆக்ச்சுவலா இந்த படம் வந்து தெலுங்குல வெளியாகி ஹிட்டான ‘தர்மாத்முடு’-ங்குற படத்தோட ரீமேக் தான்.
டைரக்ஷன் தான் எஸ்.பி.முத்துராமன் சார் பண்ணாரு. ரஜினி சாருக்கு ஏத்த மாதிரி இதுக்கு திரைக்கதை, வசனம் எழுதினவரு நம்ம டைரக்டர் விசு சார் தான். ஸ்கிரிப்ட் கொடுத்ததும் அவர் ஒரு சம்பளம் சொன்னாரு.

நான் இவ்ளோ தான் சார் கொடுப்பேன்னு ஒரு சம்பளம் சொல்லி ஃபைனல் பண்ணேன். படம் முடிஞ்சதும் நான் ஃபர்ஸ்ட் பார்த்தேன். உடனே, விசு சாரை கூப்பிட்டு நான் என்ன சம்பளம் பேசுனனோ, அதை அப்படியே டபுளா கொடுத்தேன்.
அவர் என்ன சார் இதுன்னு கேட்டாரு, இல்ல சார் நான் அப்பவே இது தான் உங்க சம்பளம்ன்னு முடிவு பண்ணிட்டேன். படம் நல்லா வந்தா கொடுக்கணும்ன்னு நினைச்சேன். படம் எனக்கு ரொம்ப திருப்தியா இருக்கு, அதான் கொடுத்தேன்னு சொன்னேன்” என்று கூறியிருந்தார்.












