சங்கமத்துல வந்தும் உங்க பழைய கதைய ஓட்டுனா எப்படி? சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சி விடுங்கப்பா…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் முத்துவேல் தற்கொலைக்கு முயல கோபி கதவை உடைத்து அவரை காப்பாற்றிவிடுகிறார். ராஜீ செய்ததால் இனி நான் எப்படி தலை நிமிர்ந்து நடப்பேன் என்கிறார். கோபி அவருக்கு ஆறுதல் கூறுகிறார். அதை தொடந்து பாக்கியா செழியனுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைக்கிறார்.
இருந்தும் ஈஸ்வரி பாக்கியா மீது கடுப்பாகிறார். இதை சும்மா விட மாட்டேன் நீ வீட்டுக்கு வா. அந்த ஜெனி இனிமே செழியனுக்கு வேண்டாம் என்கிறார். காரில் சென்று கொண்டு இருக்கும் ஜெனியிடம் நாளை ஞானஸ்தானம் வைத்து விடலாம் என்கிறார் ஜோசப். ஆனால் ஜெனி அது நடக்க வேண்டாம் என்கிறார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடிக்க வந்த வாய்ப்பு!.. மிஸ் ஆயிடுச்சேன்னு இப்ப வரைக்கும் ஃபீல் பண்ணும் கமல்!..
என் பிள்ளைக்கு எது செய்றத நான் தான் முடிவு செய்யணும். என் பேச்சை கேட்டா உங்க கூட வருவேன் என்கிறார். மரியமும் அதையே சொல்ல ஜோசப் சரியென்கிறார். பாண்டியன் ராதிகாவிடம் விஷயத்தினை கேட்க அவர் தற்கொலை விஷயத்தினை சொல்ல அதிர்ச்சி ஆகிவிடுகிறார்.
பின்னர் நானும் பசங்களை விட்டு தேட சொல்லி இருப்பதாக கூறுகிறார். பழனியை அழைத்து அவரை தனியே விடாம பாத்துக்கோங்க என்கிறார். ரூமில் இருக்கும் பாக்கியாவுக்கு அமிர்தா கால் செய்து சீக்கிரம் சமையல் நடக்கும் இடத்துக்கு வாங்க என்கிறார். அவரும் பதறி அடித்து வர 75 பேருக்கு வெஜ் செய்யணுமாம் என்கிறார்.
என்ன செய்வது என அவர்கள் குழம்பி நிற்க நேராக அந்த மேனேஜரிடமே கால் செய்து கேட்கிறார். அவர் இட்லி, தோசை, அப்படி செய்ய சொல்லி விடுகிறார். பின்னர் அனைவரும் அழுத்து கொண்டே வேலை செய்ய கோமதியிடம் உதவி கேட்கலாமா என யோசித்து கொண்டே கால் செய்கிறார்.
இதையும் படிங்க: உடைந்த ரோகினி ரகசியம்!… இந்த அண்ணாமலை யாரு பக்கம் தான் இருக்காரு!…
அவர் மற்ற நேரமா இருந்தா நானே வந்துடுவேன். ஆனால் என் அண்ணன் வீட்டில் பிரச்னை அதனால் ஒரு மாதிரியாக இருப்பதாக கூறிவிடுகிறார். பாக்கியாவும் ஆறுதல் சொல்லி வைத்து விடுகிறார். பின்னர் ராஜீ அழுதுக்கொண்டே இருக்க கண்ணன் கடுப்பாகிறான். எங்க வீட்டுக்கு பேசணும் போனை கொடு எனக் கேட்கிறார்.
அதெல்லாம் முடியாது எனச் சொல்லும் கண்ணன் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். என்னை விட்டு எங்க போற எனக் கேட்க நீ நிம்மதியா தனியா உட்கார்ந்து அழு நான் வெளியே போயிட்டு வரேன் எனக் கிளம்பி சென்று விடுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.