Connect with us

Cinema News

காதலியை அறிமுகப்படுத்திய பிக் பாஸ் பிரபலம்.. காண்டுல ஏடிகே போட்ட கமெண்ட்டை பாருங்க!

பிக் பாஸ் சீசன் 6 பிரபலம் ராம் ராமசாமி ஒருவழியாக தனது காதலியை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தி உள்ளார். அந்த போஸ்ட்டை விட அதற்கு ஏடிகே போட்ட கமெண்ட் தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனே விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. சமீபத்தில், அதற்கான ப்ரமோ வீடியோ ஷூட்டிலேயே கமல் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொகுசு பாப்பாவாக மகேஸ்வரி, குயின்ஸி என பல பெண்களிடம் காதல் வலை வீசிக் கொண்டிருந்த அமுல்பேபி ராம் ராமசாமி ஒருவழியாக தனது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார்.

பிக் பாஸ் ராம் ராமசாமி:

பார்க்க பாலாஜி முருகதாஸ் மாதிரி வாட்ட சாட்டமாக ஹேண்ட்ஸம் ஆக இருக்கிறே, நிரூப்பின் தம்பி மாதிரி இருக்கிறாரே அவர்களை போல இவரும் பிக் பாஸ் கேமை செம சூப்பராக விளையாடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய பல்பை கொடுத்து ஏமாற்றி விட்டார்.

வீட்டில் இருந்த வரை சோபாவை எப்படி தேய்க்க முடியுமோ அந்தளவுக்கு தேய்த்த ராம் ராமசாமி 63 நாட்கள் அப்படியே தேய்த்து விட்டு பெரிதாக ஷைன் ஆகாமலே சென்று விட்டார். பிக் பாஸ் டைட்டில் வின்னரான அசீமே இப்போ என்ன பண்றாருன்னு தெரியல, இதுல ராம் ராமசாமி என்ன பண்ணா என்ன என்றே ரசிகர்கள் அமைதியாக அவரை ஒட்டுமொத்தமாக மறந்து விட்ட நிலையில், தற்போது தனது காதலியை அறிமுகப்படுத்தி மீண்டும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறார் ராம்.

காதலியை அறிமுகப்படுத்திய பிக் பாஸ் ராம்: 

பிக் பாஸ் ராம் ஒருவழியாக தனது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார். ஏடிகே உடன் இணைந்து காஸ்மோ தம்பி எனும் ஆல்பம் வீடியோவை உருவாக்கிய நிலையில், அதில் ராமுக்கு ஜோடியாக நடித்த ராஷி பிரபா உடன் படு நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றை தற்போது வெளியிட்டு ”What will I do without you” என ரெட் ஹார்ட் எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.

உண்மையாகவே தனது காதலியைத் தான் ராம் அறிமுகப்படுத்தியிருக்கிறாரா? அல்லது காஸ்மோ தம்பி வீடியோ ஆல்பத்தின் ப்ரமோஷனை செய்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவ வீட்லயே தங்கிடாத: ராம் ராமசாமி செம ரொமாண்டிக்காக இப்படியொரு போஸ்ட் போட அதற்கு கீழ் செம கூலாக ஏடிகே “எல்லாம் சரி.. ரொம்ப நாளா அப்படியே அவ வீட்லயே தங்கிடாத” என கமெண்ட் போட்டு ராம் ராமசாமியின் சமீபத்திய லீலைகளை அம்பலப்படுத்தி உள்ளார்.

பொண்ணு சூப்பரா இருக்கு ராம் ப்ரோ, எப்போ கல்யாணம் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் போட்டு இருவரையும் வாழ்த்தி வருகின்றனர். லிவிங் டுகெதராவா இருக்கீங்க என்ன ஏடிகே இப்படி கமெண்ட் போட்டு இருக்காரே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top