Connect with us

Biggboss Tamil 7

ஒருவழியா டாஸ்கை ஆரம்பித்த பிக்பாஸ் டீம்… அதுக்கு ஃபேன்ஸையுமா இப்டி கொடுமையா கொடுப்பீங்க..!

BiggBoss Tamil: டாப் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் முதலிடத்தில் இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்டடித்து கொண்டு இருக்கிறது. இன்றைய ப்ரோமோவில் பெரிய வெடிக்குண்டை எறிந்து இருக்கிறார் பிக்பாஸ்.

7வது சீசன் தொடங்கி 10 நாட்களை தாண்டி இருக்கும் நிலையில் நிகழ்ச்சி சில நாட்களாக போர் அடிக்க தொடங்கி விட்டது. டாஸ்க் எதுவும் கொடுக்கப்படாததால் கதை பேசியே காலத்தினை ஓட்டிவிடுவார் என்பதால் இன்றைய ப்ரோமோவில் புது குண்டு விழுந்தது.

இதையும் படிங்க: ராம்சரணுக்கும் பெப்பே… தனுஷுக்கும் பெப்பே… லியோவில் நடந்த திடீர் ட்விஸ்ட்..!

அதன்படி லக்ஸூரி டாஸ்கின் கடனை அடைக்க மூன்று பேர் ஒரு ரூமுக்குள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் பஸ்ஸர் அடிப்பதற்குள் வெளியே வந்து விட்டால் வீட்டின் மொத்த உணவு பொருட்களும் எடுக்கப்பட்டு விடும் எனக் கூறப்பட்டது. அதனை அடுத்து ரவீனா, விசித்ரா மற்றும் யுகேந்திரன் டாஸ்கிற்கு ரெடியாகினர்.

ஹவுஸ்மேட்டினர் இது கஷ்டமா இருக்கும். செஞ்சிருவீங்களா என விசித்ராவை தொடர்ந்து கேட்டும் தைரியமாக களத்தினுள் இறங்கி விட்டார். அதையடுத்து மூவரும் ஆக்டிவிட்டி நடக்கும் ரூமிற்க்குள் நுழைந்தனர். சுற்றிலும் வட்டமான ஒரு புகைப்படத்தினை செட் செய்து இருந்தனர். 

தொடர்ச்சியாக ஆரியமாலா பாட்டை லூப் மோடில் போட்டுக்கொண்டே இருந்து வருகின்றனர். தூங்காமல் வெளியில் செல்லாமல் இதே பாட்டை கேட்டுக்கொண்டு ஏசியும் இல்லாமல் மூவரும் எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: ஜெயிலர் வடை வாயன்களுக்கு.. நல்லா வயிறு எரியட்டும்டா.. லியோ படைத்த சாதனை.. ப்ளூ சட்டை மாறன் ஜால்ரா!..

மூவரும் இந்த டாஸ்க்கினை ஜெயித்தால் மொத்த டீமுக்கும் சாப்பாடு கிடைக்கும் தோற்கும்பட்சத்தில் அடுத்த இரண்டு நாட்களை எப்படி ஓட்டுவார்கள் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் லைவில் பார்க்கும் ரசிகர்களுக்கே பாட்டை மீண்டும் மீண்டும் கேட்பது தலைவலியாக இருப்பதாக கமெண்ட்கள் பரவி வருகிறது.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top