அமுக்கிடட்டாவா?.. என்னடா நடக்குது பிக் பாஸ் வீட்ல?.. பெண் போட்டியாளர்களுடன் கண்டபடி விளையாடுறாரே!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:54  )

விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதற்கான முதல் நாளிலேயே எவிக்ஷன் ஆட்டத்தை விஜய் சேதுபதி ஆடியது தான். கடைசியாக மகாராஜா படத்தில் அவருக்கு மகளாக நடித்த சாச்சனாவே வெளியேறிவிட்டார்.

இந்த வாரம் விஜய் சேதுபதி மீண்டும் அவரை வீட்டுக்குள் கொண்டு வருவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஜா படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவுக்காகத்தான் அவர் வெளியேறினார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தொடர்ந்து தங்களது வலிமையை காட்டி வருகின்றனர். ரஞ்சித் நெற்றியில் முத்தம் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இன்னொரு போட்டியாளரான ஜெஃப்ரி கொஞ்சம் கொஞ்சமாக அசல் கோளாறு போல மாறி வருகிறார் என ரசிகர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும்போது சௌந்தர்யா கீழே விழுந்து விட அவரை அமுக்கட்டா என ஜெஃப்ரி பேசிக்கொண்டே கிட்டே நெருங்கியதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி என்னடா நடக்குது அங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கமல்ஹாசன் இருந்தபோது பிக் பாஸ் வீட்டில் காப்பாற்றப்பட்ட கலாச்சாரம் விஜய் சேதுபதி வந்த பிறகு காப்பாற்றப்படுமா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர். முதல் வாரத்திலேயே ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில் இந்த சீசன் இன்னும் என்னவெல்லாம் பிரச்சினையை கிளப்பும் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

Next Story