1. Home
  2. Bigg boss

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போறது இவர்தானா!.. இடத்தை அடைச்சது போதும் கிளம்புங்க!..

பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் முதல் வாரத்தில் ரவீந்தர் சந்திரசேகர் வெளியேறப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. வைல்டு கார்டு என்ட்ரியாக சாச்சனா வரப்போவதாகவும் கூறுகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 தொடங்கியதிலிருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி புது ஹோஸ்ட்டாக கலந்து கொண்டு முதல் எபிசோடிலேயை கலக்கிவிட்டார். பிக் பாஸ் வீட்டுக்கு முதல் ஆளாக உள்ளே நுழைந்த மகாலட்சுமியின் கணவரான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் முதல் 24 மணி நேரத்தில் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா வெளியேறினார்.

அதன் பின்னர் நடைபெற்ற நாமினேஷன் அதிக வாக்குகளை பெற்று ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் உள்ளனர். எப்படியும் விஜய் டிவி தொகுப்பாளினியான ஜாக்குலினை காப்பாற்றி விடுவார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அவருக்கு பதிலாக இந்த வாரம் ரவீந்தர் சந்திரசேகர் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் ஆஃப்லைன் ஓட்டிங்கில் குறைவான வாக்குகளை பெற்று ரவீந்தர் உள்ள நிலையில், அதிகபட்சமாக அவர்தான் வெளியேற போகிறார் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான படப்பிடிப்பு நாளை நடைபெறும் என்றும் இதுவரையிலான கணக்கெடுப்பில் ரவீந்தர் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

ஒருவேளை ரவீந்தர் வெளியேறவில்லை என்றால் கவுண்டம்பாளையம் ரஞ்சித் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவார் என்றும் கணிப்புகள் வெளியாகி உள்ளன. ரவீந்தர் வீட்டை அடைத்துக் கொண்டு இருக்கிறார் என்றும் அவருக்கே ஒரு பெட் பத்தாது என்றும் ட்ரோல்கள் பறக்கும் நிலையில், அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விஜய் டிவி ப்ராடெக்டான ஜாக்குலினை முதலில் வீட்டை விட்டு அனுப்புங்க எல்லா ப்ரோமோவிலும் அவரையே காட்டி விஜய் டிவி காப்பாற்றுகிறது. இந்த சீசனிலும் மக்கள் ஏமாறக் கூடாது என்றும் ரவீந்தர் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மகாராஜா படத்தின் வெற்றி விழா நிறைவடைந்த நிலையில், மீண்டும் சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் இந்த வாரமே வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைவார் என்றும் அவருக்கு இன்னொரு வாய்ப்பை கொடுக்க விஜய் டிவி முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.