ஒரே நேரத்தில் 3 படங்கள்.. பேக் டு பேக் ஷூட்டிங்... ட்ரெண்டிங் நடிகைகளை ஓரம் கட்டிய திரிஷா..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:19  )

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுக்கு மேலாக முன்னணி நடிகையாக நடித்து வருகின்றார் நடிகை திரிஷா. தற்போது இவருக்கு 41 வயதாகின்றது. இருப்பினும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக சுற்றி வருகின்றார். திருமணம் குறித்த கேள்விகள் இவரை சுற்றி வளம் வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வருகின்றார்.

பொதுவாக ஹீரோயின்கள் 40 வயது தாண்டி விட்டாலே அவர்களுக்கு நடிக்கும் வாய்ப்பு குறைந்துவிடும். ஆனால் 41 வயதிலும் இளமை குறையாமல் இருக்கும் திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. தொடர் தோல்விகளுக்கு பிறகு பீல்ட் அவுட்டாகி இருந்த த்ரிஷாவுக்கு ஒரு சிறந்த கம்பேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் திரைப்படம் தான்.

அதில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் மீண்டும் இடம் பிடித்தார் நடிகை திரிஷா. இதனால் தொடர்ந்து இவருக்கு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வந்தது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்து மீண்டும் தனது திரைப்பயணத்தை தொடங்கி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படு பிஸியாக இருக்கும் நடிகை திரிஷா தொடர்ந்து டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

ஏற்கனவே நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் இவர் அதைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் கமிட்டாகி இருக்கின்றார். மேலும் கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகின்றார். இப்படி நடிகை திரிஷா இந்த மூன்று திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகின்றார்.

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கின்றார். அதைத்தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஸ்பெயின் நாட்டில் தான் நடைபெற இருக்கின்றதாம். இப்படி ஒரு பக்கம் அஜித்தின் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை திரிஷா மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

நேற்று த்ரிஷா ஸ்பெயின் நாட்டிலிருந்து சென்னை திரும்பி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை திரிஷா படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் சென்னை திரும்பி விட்டார் என்று கூறி வந்தார்கள். ஆனால் காரணம் அது இல்லை. அதாவது நடிகை திரிஷா சினிமா மட்டும் இல்லாமல் விளம்பர படங்களில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து வருகின்றார்.

நகை கடை விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காக சென்னை திரும்பி இருக்கும் நடிகை திரிஷா அந்த ஷூட்டிங் முடித்துவிட்டு பிறகு மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று குட் பேட் அக்லி திரைப்படத்தில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் விஷ்வந்திரா, எவிடன்ஸ், ஐடென்டிபை உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து முடித்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Next Story