Ajithkumar: பிரபல தயாரிப்பாளர் தன்னுடைய நஷ்டத்துக்கு ஈடு செய்யும் வகையில் மீண்டும் கோலிவுட்டையே நம்பி வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த ஒரு விஜயை வைத்து படத்தினை தயாரித்தவர் தில் ராஜு. தெலுங்கு சினிமாவில் படங்களை தயாரித்து ஓரளவு நல்ல வசூலை குவித்தவர். வாரிசு படத்தில் பெரிய அளவில் ஆட்டம் கண்டார். இது அவரின் வருமானத்திலும் அடி கொடுத்தது.
இதை தொடர்ந்து தமிழ் படத்தினை தயாரிக்க விரும்பாதவர். தமிழ் இயக்குனரை தங்கள் பக்கம் அழைத்து சென்றார். கேம் சேஞ்சர் படத்தினை ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கினார். பெரிய வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட படம் பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனத்தை குவித்தது.
மொத்தமாக தமிழ் சினிமாவில் அடி வாங்கி தற்போது வருமானத்திற்கே பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது. மீண்டும் தமிழ் பிரபலத்தையே நம்பி இருக்கிறார் தில் ராஜு. மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு படத்தினை தயாரிக்க முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இயங்கி வருகிறார்.
மார்கோ படத்தினை இயக்கிய ஹனிவ் அதானி இயக்கத்தில் ஒரு படத்தினை தில் ராஜு தயாரிக்க இருக்கிறார். இப்படத்திற்காக அஜித்குமாரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறதாம். அஜித் தரப்பும் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியாகவே இருப்பதாகவும், விஜயிற்கு கொடுத்தது போல பெரிய கோடி சம்பளத்தை அஜித் தரப்பு கேட்பதால் ஏற்கனவே பிரச்னையில் இருக்கும் தில் ராஜு யோச்னையுடன் குறைக்க வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த பேச்சுவார்த்தை சரியாக முடிந்தால் ஆதி ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 64வது படத்தை தொடர்ந்து இந்த படம் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜயால் போனதை காப்பாற்றுவாரா அஜித் என்ற கேள்வி எழுந்துள்ளது.
