திடீர் தளபதி... அவங்க மட்டும் இல்லைனா அமரன் படம் அம்போதான்... ப்ளூ சட்டையின் விமர்சனம்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:51  )

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கின்றார். இது ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது.

நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜர் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். மேலும் இப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டெர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரித்து இருக்கின்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் தீபாவளியான நேற்று வெளியானது.

படம் வெளியானது முதலே திரையரங்குகளில் ஏகப்பட்ட கூட்டம் குவிந்து வருகின்றன. இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். மேலும் ராணுவ கதாபாத்திரத்திற்கு தன்னை முழுவதும் தயார்படுத்திக் கொண்டு இந்த திரைப்படத்தில் முழு அர்ப்பணிப்புடன் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கின்றார் எனவும், மேலும் நடிகை சாய் பல்லவி தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றார் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

சாய் பல்லவியை தவிர அந்த கதாபாத்திரத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் இந்த அளவுக்கு சிறப்பாக இருந்திருக்குமா என்பது தெரியவில்லை என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். படம் குறித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் தொடர்ந்து பாசிடிவ்வான விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில் எங்கு புளு சட்டை மாறனின் விமர்சனத்தை காணவில்லை என்று எதிர்பார்த்த அவர்களுக்கு இதோ வந்துவிட்டேன் என்று கூறி விமர்சனத்தை தெரிவித்திருக்கின்றார்.

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் ஏகப்பட்ட சொதப்பல்கள் இருக்கின்றது. திடீர் தளபதியான சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக மாறி முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார். ராணுவம் தொடர்பான எந்த ஒரு டீடெயிலும் சரியாக இல்லை. இது ஒரு உண்மை கதை கிடையாது. சினிமாவுக்காக ஏகப்பட்ட விஷயங்களை உள்ளே புகுத்து இயக்கியிருக்கின்றார் இயக்குனர். 50% படம் நன்றாக இருக்கின்றது. இந்த படத்தை 100% சிறந்த படமாக மாற்றியதற்கு முக்கிய காரணம் சாய் பல்லவி தான்.

அவர் மட்டுமே படத்தில் இல்லை என்றால் அமரன் படம் அம்போதான் என்று கூறியிருக்கின்றார். ஒரு வழியாக ப்ளூ சட்டை மாறன் சாய் பல்லவிக்கு சிறந்த பாராட்டுகளை கொடுத்து விட்டார். சிவகார்த்திகேயன் படத்துக்கு முழு சட்டை மாறன் இவ்வளவு பாசிட்டிவான விமர்சனங்களை சொன்னதே கிடையாது. மேலும் சோசியல் மீடியாவில் சின்ன தளபதி என்றும் திடீர் தளபதி என்றும் சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்து வரும் ப்ளூ சட்டை மாறனே அவரை இந்த படத்திற்காக பாராட்டி இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

படத்தின் விமர்சனத்தை எல்லாம் தாண்டி சில தனிப்பட்ட கருத்துக்களையும் அவர் பகிர்ந்து இருக்கின்றார். அதாவது இமான் விஷயத்தில் நடந்த சம்பவத்தை தற்போது வரை மனதில் வைத்துக்கொண்டு அவரை பேசியிருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பது முழுக்க முழுக்க வன்மம் மட்டுமே என்று கூறி வருகிறார்கள் என்ற படத்தை பற்றி குறைவாக பேசினாலும், அமரன் படம் பிளாக்பஸ்டர் திரைப்படம் தான் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவரை டேக் செய்து கூறி வருகிறார்கள்.

Next Story