Kantara 2: இட்லி கடையை காலி செய்த காந்தாரா 2!.. வீடியோ மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ஃபேன்ஸ்!…

Published on: December 5, 2025
---Advertisement---

Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான டப்பிங் படம் அடித்து காலி செய்துவிடும். அதாவது நேரடி தமிழ் படத்தை விட வேறு மொழியில் எடுக்கப்பட்டு தமிழ் டப் செய்யப்பட்டு வெளியான படம் அதிக வசூலை பெற்று விடும். கடந்த பல வருடங்களில் இது பலமுறை நடந்திருக்கிறது. தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் வெளியான பாகுபலி, பாகுபலி 2, RRR, புஷ்பா, புஷ்பா 2 போன்ற படங்கள் நேரடி தமிழ் படங்களை விட அதிக வசூலை பெற்றிருக்கிறது.

அதேபோல கன்னடத்தில் எடுக்கப்பட்ட காந்தாரா, KGF, KGF2, ஆகிய படங்கள் தமிழில் வசூலை அள்ளி இருக்கிறது. அதேபோல் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில்தான் கன்னடத்தில் ரிசப் செட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா 2 திரைப்படம் தனுஷின் இட்லி கடை வசூலை பதம் பார்த்திருக்கிறது.

தனுஷ் இயக்கி நடித்து ஒரு ஃபீல் குட் படமாக உருவான இட்லி கடை திரைப்படம் கடந்த 1ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தது. குடும்பத்துடன் பார்க்கலாம், வன்முறை காட்சிகள் இல்லை, பீல் குட் மூவி, ஒரு தகப்பனின் கனவையும், பெருமையும் பேசும் படம், கண்டிப்பாக இந்த காலை இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம் என்றெல்லாம் பலரும் பாராட்டினார்கள்.

ஆனால் இப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதே நேரம் Kantara Chapter 1 என்கிற தலைப்பில் வெளியான காந்தாரா 2 திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. தனுஷின் இட்லி கடை திரைப்படம் இரண்டு நாட்களில் 20 கோடி வசூல் செய்துள்ள நிலையில் காந்தாரா 2 திரைப்படம் முதல் நாளே 60 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. கன்னடத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் காந்தாரா 2 வசூலில் சக்கை போடு போடுகிறது.

இதனால், இட்லி கடை திரைப்படம் ஓரங்கட்டப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஆற்றின் குறுக்கே வடிவேல் நடந்து வரும்போது கரையில் இருந்து ஒருவர் கத்த வடிவேல் அதிர்ச்சியில் தண்ணீரில் விழுவார். அந்த வீடியோ மீம்ஸை பகிர்ந்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். இதில் ஹைலைட் என்னவெனில் காந்தாரா படத்தில் தெய்வம் கத்தும் சவுண்ட்டை இதோடு மேட்ச் பண்ணியிருப்பதுதான். இந்த வீடியோ மீம்ஸை பிரபல சினிம விமர்சகர் புளூசட்ட மரணம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment