இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி!. ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:17  )

Jayam ravi: தமிழ் சினிமாவில் ஒரு மினிமம் கேரண்டி ஹீரோவாக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் முதலில் நடித்து வெளியான படத்தின் பெயர் இவரின் பெயருக்கு முன்பு ஒட்டிக்கொண்டு அதுவே அவரின் அடையாளம் ஆகிவிட்டது. துவக்கத்தில், அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் தெலுங்கு ரீமேக் படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார். சாக்லேட் பாய் போலவும் இருப்பார், அதிரடி சண்டை காட்சிகளிலும் நடிப்பார். நன்றாக நடனமும் ஆடுவார்.. காதல், ஆக்‌ஷன் என எந்த கதை என்றாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்.

அதனால்தான் தயாரிப்பாளர்கள் அவரை வைத்து தொடர்ந்து திரைப்படங்களை எடுத்து வருகிறார். கடந்த சில வருடங்களாக தனது மாமியாரின் தயாரிப்பில் படங்களில் நடித்து வந்தார். அதில் ஏற்பட்ட பிரச்சனையில்தான் ரவி இப்போது விவாகரத்து வரை போயிருக்கிறார் என சொல்லப்படுகிறது.

ஜெயம் ரவி இப்போது மும்பையில் அலுவலகம் ஒன்றை திறந்திருக்கிறார். அங்கிருந்தவாறே விமானத்தில் பறந்து சென்று படப்பிடிப்புகளில் கலந்துகொள்வார் என சொல்கிறார்கள். கே.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

பொதுவாக பெரும்பாலான நடிகர்களுக்கு நாம் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், அதற்கான நேரம் கூடி வராது. சிலரோ, நடிப்பதே நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என தயங்குவார்கள்.. அந்தவகையில், ஜெயம் ரவிக்கும் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறதாம்.

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ஜெயம் ரவி ‘என்னிடம் இரண்டு கதைகள் இருக்கிறது. யோகிபாபுவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. ஒரு கதையில் நானே ஹீரோவாக நடிப்பேன்’ என சொல்லி இருக்கிறார்.

Next Story