விக்கிரவாண்டியில் குவியும் தமிழகம்... திரும்பும் திசை எங்கும் தலைகள்... மாஸ் காட்டும் தளபதி…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:20  )

Vijay: தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை 27 அக்டோபர் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடக்க இருக்கும் நிலையில் இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை இந்த வருடத்தின் தொடக்கத்தில் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இக்கட்சியின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

காமராஜர், பெரியார், தமிழகத்தின் ஜான்சி ராணி உள்ளிட்டம் மிகப்பெரிய தலைவர்களின் பேனர்களுடன் விஜய் நிற்க ஏற்பாடுகளை ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. 500க்கும் அதிகமான பஸ்களில் மக்கள் திரளாக இன்றிலிருந்து மாநாடுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

முதல் முறையாக ஒரு அரசியல் மாநாடு எந்தவித பணமும் கொடுத்து ஏற்பாடு செய்யப்படாமல், மக்கள் தாங்களே விருப்பப்பட்டு அலைகளாக திரும்பும் திசை எல்லாம் தலைகளாக இருக்கும் காட்சிகளை விக்கிரவாண்டியில் தற்போது பார்க்க முடிகிறது.

தற்போது நடக்கும் அரசியல் மாநாடுகளுக்கு மக்கள் இத்தனை ஆயிரம் வேண்டும் என பலரிடம் டீல் பேசி கூட்டம் சேர்ப்பது தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் முதல் முறையாக யாரும் அழுத்தம் கொடுக்காமல் பிச்சை என்ற ஒற்றை ஆளுக்காக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கிளம்பி வருகின்றனர்.

இதனால் நாளை விஜயின் அரசியல் மாநாடு மிகப்பெரிய அளவில் வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்லர் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த் காக்கா கழுகு கதையை சொல்லி இருப்பார். அதற்கு விஜயை பலர் விமர்சனம் செய்தாலும், அது தற்போது உண்மையாகி இருக்கிறது.

காக்கா கூட்டம் மட்டுமே எப்பொழுதும் யாரையும் விட்டுக் கொடுத்துக்காமல் ஒன்றாக இணைந்து செயல்படும். அதுபோலவே நடிகர் விஜய் மற்றும் அவருடைய ரசிகர்கள் முதல் மாநாட்டிலேயே தங்களுடைய பலத்தை காட்ட முடிவெடுத்துவிட்டனர்.

மேடையில் விஜய் இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக பேசுவார் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் பேசி தன்னுடைய ரசிகர்களை அவருடைய படம் போல் ரசிக்க வைப்பார் என்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

Next Story