ஒவ்வொரு படத்துக்கும் பல கோடிகளில் மாறும் விஜயின் சம்பளம்… சறுக்கும் அஜித்!...
Ajith: கோலிவுட்டில் ஒரே நேரத்தில் தங்களுடைய கேரியரை தொடங்கியவர்கள் விஜய் மற்றும் அஜித். ஆனால் தொடர்ந்து தன்னுடைய நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விஜய் தற்போது கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகராக மாறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
1992ம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் அறிமுக நாயகர்களாக வருகின்றனர். விஜயிற்கு அப்பா இயக்குனர் சந்திரசேகர் இருந்ததால் அவர் தொடர்ச்சியாக படம் எடுத்து அவரை கோலிவுட்டில் தக்க வைக்க பாடுப்பட்டார். அதே நேரத்தில் அஜித் தனியாக போராடி வாய்ப்புகளை கையகப்படுத்தினார்.
இதையும் படிங்க: என்னை விட்ருங்கப்பா!. எனக்கு சினிமாவே வேணாம்!… கவுண்டமணி முடிவெடுக்க காரணம் இதுதானாம்!…
இருந்தும் தொடர்ச்சியாக அப்பா இயக்கத்தில் நடித்தாலும் விஜயின் நடிப்பால் வந்த வாய்ப்புகளே அவருக்கு கோலிவுட்டில் அடையாளத்தினை மாற்றியது. தனக்கு இப்போ நடிப்பு தான் வேலை. அதில் தான் கவனம் செலுத்துவேன் எனக் கூறிய விஜய் தொடர்ச்சியாக படத்தில் நடிப்பதை மட்டுமே செய்து வந்தார்.
ஆனால் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என அஜித்தின் கவனம் சிதறிக்கொண்டே வந்தது. அங்கு நடக்கும் விபத்துக்களால் அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளும் மிஸ்ஸானது. இருந்தும் கோலிவுட்டில் முன்னணி நடிகராக இன்றும் தன்னை நிலைநிறுத்தி கொண்டே இருக்கிறார். தற்போது அவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு அஜித்தின் சம்பளம் 163 கோடி எனக் கூறப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: கவுண்டமணி அப்பேற்பட்ட ஆளுதான்! விசித்ரா சொன்னதையும் தாண்டி அதெல்லாம் நடந்திருக்கு.. போட்டுடைத்த பிரபலம்
ராசியான நம்பரான 3ல் முடியும்படியாக சம்பளம் வேண்டும் என்பது அஜித்தின் கணக்கு. ஆனால் இவரின் போட்டி நடிகராக இருந்த விஜயிற்கு சம்பளம் கணிசமாக உயர்ந்து இருக்கிறது. நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஆனால் அதை தற்போது விஜய் உடைத்து இருக்கிறார்.
லியோ படத்திற்கு விஜய்க்கு சம்பளமாக 150 கோடி பேசப்பட்டதாம். தற்போது அவர் நடித்து வரும் கோ0ட் திரைப்படத்திற்காக 200 கோடி வரை சம்பளமாக விஜய் வாங்கி இருக்க கூடும் எனவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் தளபதி 69 திரைப்படத்திற்காக அவருக்கு சம்பளம் 250 கோடி கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ஒரு ஹீரோவிற்கு ஒரு படத்திற்கு இன்னொரு படம் 50 கோடி வரை உயர்த்திக் கொடுப்பது விஜயிற்கு தான் முதல் முறை. அதிலும் விஜயின் கடைசி படமாக இருக்கும் தளபதி69 அவருக்கு பெரிய சம்பளத்தினை கொடுக்க இருக்கிறது. அதுவே தென்னிந்திய அளவில் மிகப்பெரிய சம்பளம் வாங்கும் முதல் நடிகர் என்ற அந்தஸ்த்தை விஜயிற்கு கொடுத்து இருக்கிறது.
இதையும் படிங்க: உங்க வாய் சும்மா இருக்க மாட்டிங்குது கோபி… கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே!