Cinema News
அஜித், விஜயை விட்டு கார்த்திக்கிடம் போனதுதான் பெரிய தப்பு! புலம்பும் தயாரிப்பாளர்
Actor Karthick: தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான கார்த்திக் தொடர்ந்து ஹீரோவாக ஜொலிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பெண் ரசிகைகள் கார்த்திக்கை வட்டமடிக்க ஆரம்பித்தனர். ஒரு ப்ளேபாயாகவே வலம் வந்தார் கார்த்திக். அதிக க்ரேஸ் உள்ள நடிகராகவும் திகழ்ந்தார்.
இந்த நிலையில் விஜய் , அஜித் இவர்களை வைத்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர் சௌந்திர பாண்டியன் கார்த்திக்கை பற்றி சில சுவாரஸ்ய சம்பவங்களை கூறினார். ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பிறகு சௌந்திரபாண்டியன் கார்த்திக்கை வைத்து ‘கேம்’ என்ற படத்தை எடுத்தார். இதுதான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என சௌந்திர பாண்டியன் கூறினார்.
இதையும் படிங்க: பைக் மெக்கானிக் டூ மாஸ் நடிகர்!.. அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத அரிய தகவல்கள்!..
ஒரு வேளை அஜித் அல்லது விஜயை வைத்து ஏதாவது ஒரு படத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் கார்த்திக்கை வைத்து படமெடுக்க நினைத்திருக்கிறார்.
ராஜாவின் பார்வையிலே சமயத்தில் அஜித்திற்கு 5 லட்சம் , விஜய்க்கு 7 லட்சம் சம்பளமாம். கேம் படத்திற்காக கார்த்திக்கு 45 லட்சம் சம்பளம் கொடுத்து கமிட் செய்திருக்கிறார் சௌந்திர பாண்டியன். இதுவே ஒரு பெரிய சாதனை என நினைத்திருக்கிறார். ஆனால் இதெல்லாம் அவரது அறியாமை என்று இப்போதுதான் புரிகிறதாம் சௌந்திரபாண்டியனுக்கு.
கேம் படத்தின் மூலம் அதுவும் கார்த்திக்கை வைத்து முதன் முதலில் பேன் இந்தியா படத்தை எடுத்ததே நான்தான் என கூறினார். இந்தப் படத்தில் கார்த்திக், மனோஜ் கே விஜயன், வினோத் குமார், ஊர்வசி, ராஜஸ்ரீ, திவ்யா தத்தா என மிகப்பெரிய நட்சத்திரங்களை வைத்து படத்தை எடுத்த சௌந்திரபாண்டியன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் திண்டாடியிருக்கிறார்.
இதையும் படிங்க: தனுஷ்-ஐஸ்வர்யா விவகாரத்து காரணம் இதுதான்… அதனால் தான் இவ்வளவு பிரச்னையும்… உண்மையை உடைத்த பிரபலம்!
இந்தப் படம் முடிந்த சமயத்தில்தான் கார்த்திக்கின் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் ரிலீஸ் ஆகி பேய் ஹிட்டானது. ஒரு வேளை இந்தப் படத்திற்கு பிறகு கேம் படத்தை வெளியிட்டிருந்தால் கூட நான் தப்பித்திருப்பேன். ஆனால் என் படம் 8வது படமாக ரிலீஸானது. அதனால் பெருமளவு நஷ்டமடைந்து தற்கொலை செய்யும் அளவுக்கு சென்று விட்டேன். ரயிலில் விழ போன என்னை சரியாக கார்த்திக்கின் போன் தான் காப்பாற்றியது.
உடனே வீட்டிற்கு வா என கார்த்திக் சொன்னார். நானும் போனேன். என் நிலைமை அறிந்து அவருடனேயே என்னை வைத்துக் கொண்டார். அதிலிருந்தே அவருடன் நான் அரசியல் வரை பயணப்பட்டேன் என்று சௌந்திர பாண்டியன் கூறினார்.
இதையும் படிங்க: கேப்டன் வீட்டில் அமீர்!. கோபத்தில் காபி-யை திருப்பி அனுப்பிய விஜயகாந்த்!.. நடந்தது இதுதான்!….