Cinema News
பண விஷயத்தில் கறார் காட்டிய கவுண்டமணி.. கேப்டன் மனசு யாருக்கு வரும்? கங்கை அமரன் பகிர்ந்த சீக்ரெட்
Actor Vijayakanth: தமிழ் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் நடிகர்களில் எம்ஜிஆருக்கு அடுத்த இடத்தில் விஜயகாந்த் திகழ்ந்து வருகிறார். ஒரு மனிதரின் புகழை அவர் இறப்பு சொல்லும் என்று கூறுவார்கள். அது விஜயகாந்த் விஷயத்தில் ஆணித்தரமாக காட்டியிருக்கிறது. ஒரு சில பேர் எம்ஜிஆருக்கு கூட இந்தளவு கூட்டம் வந்ததில்லை என்றுதான் சொன்னார்கள்.
இன்று வரை அவர் நினைவிடத்திற்கு வந்து விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தளவுக்கு கொடை வள்ளலாகவும் பிறருக்கு உதவி செய்வதையே தன் கொள்கையாகவுமே வைத்திருந்தார் விஜயகாந்த். இவரால் இந்த தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் என்ற பேச்சே இதுவரை வந்ததில்லை. ஒரு வேளை தயாரிப்பாளருக்கோ இயக்குனருக்கோ பணம் சம்பந்தமாக ஏதாவது பிரச்சினை இருந்தாலும் தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்தவர் விஜயகாந்த்.
இதையும் படிங்க: பிரச்னை மேல பிரச்னை!… பாக்கியலட்சுமியை பார்த்து நாங்க தான் பாஸ் ஃபீல் பண்ணனும்…
இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் விஜயகாந்த் குறித்து சில தகவல்களை கூறினார். கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கோயில் காளை’. இந்தப் படத்தில் விஜயகாந்த், கனகா ஆகியோர் லீடு ரோலில் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை எடுக்கும் போது கங்கை அமரன் மிகவும் மன நெருக்கடியிலும் பண நெருக்கடியிலும் இருந்தாராம். இதை நன்கு அறிந்த விஜயகாந்த் சம்பளம் பற்றி பேசிக் கொள்ளவே இல்லையாம். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம். ஆனால் கவுண்டமணி செய்த வேலை கங்கை அமரனை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது.
இதையும் படிங்க: ஒரு வரி கூட கதை கூட கேட்காமல் அஜித் நடித்த படம்!.. அதுக்கு காரணம் இதுதானாம்!..
இந்தப் படத்தில் கவுண்டமணி மற்றும் செந்திலும் நடிக்க படத்தில் அமைந்த காமெடி காட்சிகள் இன்றளவு பெரும் வரவேற்பை பெற்ற காட்சிகளாகவே அமைந்தன. அப்போது டப்பிங் பேச கவுண்டமணியை அழைத்த போது மீதிப் பணத்தை கொடுத்தால் மட்டுமே டப்பிங் பேச வருவேன் என கவுண்டமணி கூறிவிட்டாராம். கவுண்டமணிக்கு நிறைய படங்களை கொடுத்தவர் கங்கை அமரன். இருந்தாலும் இப்படி செய்கிறாரே என்ற மன உளைச்சலில் கங்கை அமரன் வெளியில் கடனை வாங்கி கவுண்டமணிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க அதன் பிறகே டப்பிங் பேச வந்தாராம் கவுண்டமணி.