கோட் இரண்டாவது சிங்கிள் எப்போ தெரியுமா? விசில் போடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
GoatMovie: விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் குறித்த அப்டேட் இணையத்தில் கசிந்துள்ள நிலையில் இன்னும் சில சுவாரஸ்ய விஷயங்கள் ரசிகர்கள் ஆச்சரியமாகி இருக்கின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தினை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வருகிறார். விஜய், பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தில் மெயின் வில்லனாக மைக் மோகன் நடிக்கலாம் எனக் கிசுகிசுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: வேகமா போய் குத்தி நிறுத்துய்யா!.. காரை வைத்து கவுண்டமணியை வஞ்சம் தீர்த்த வடிவேலு!..
வில் ஸ்மித்தின் நடிப்பில் வெளியான ஜெமினிமேன் படத்தின் ரீமேக்காக கோட் திரைப்படம் உருவாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகிறது. இதனால் ஒரிஜினல் கதைப்படி விஜயின் இளவயது கேரக்டர் நெகட்டிவ் ஷேட் எடுக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் விசில் போடு என்ற முதல் சிங்கிள் ஏப்ரல் 14ந் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் விஜய், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உள்ளிட்ட மூவரின் டான்ஸ் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. இப்பாடலுக்கு ராஜூ சுந்தரம் கோரியோ செய்து இருப்பார்.
இதையும் படிங்க: குஷ்பூ வீட்டில் இருக்கும் ஒரே ஒரு புகைப்படம்! அட இந்த நடிகரா? அப்போ பிரபு?
எப்போதும் விஜயின் பாட்டுக்கு இருக்கும் கிரேஸ் இந்த பாடலுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் ஏமாற்றத்தினையே உருவாக்கியது. விஜய் பாடலுக்கு சரியாக யுவன் இசையமைக்கவே இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. அந்த கவலையை போக்கும் பொருட்டு அடுத்த சிங்கிள் மீது படக்குழு தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த மாதம் 22ந் தேதி தான் விஜயின் பிறந்தநாள் என்பதால் அன்றைய நாளில் ரிலீஸ் இருக்கும் எனக் கிசுகிசுக்கின்றனர். இப்பாடலில் விஜயுடன் திரிஷாவும் இணைந்து நடனம் ஆட வாய்ப்பு இருப்பதாக கிசுகிசுக்க்கின்றனர்.
இதையும் படிங்க: வாய்ப்புக்காக இப்படி ஓபனா இறங்குவீங்க? நயன்தாரா டிரெஸால் கழுவி ஊற்றும் ரசிகர்கள்!..