அட்லீ படத்தில் நடிக்கிறேனா?.. கட்டா குஸ்தி 2 ஹீரோயின் உண்மையை உடைச்சிட்டாரே!..

X
அட்லீ படத்தில் நடிக்கிறேனா?.. கட்டா குஸ்தி 2 ஹீரோயின் உண்மையை உடைச்சிட்டாரே!..

அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் ராக்கா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் நடிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால், அது வெறும் வதந்தி என ஐஸ்வர்யா லட்சுமி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கட்டா குஸ்தி 2 இந்த ஆண்டு ஐஸ்வர்யா லட்சுமிக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அர்ஜுன் தாஸ் உடன் அவர் நடித்துள்ள #லவ் சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இல்லை நான் ராக்கா படத்தில் நடிக்கவில்லை. யாராவது என்னை இந்தப் படத்தில் நடிக்க வையுங்கள் என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ராக்கா படத்தில் தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தீபிகா படுகோன் நடிப்பதாக மட்டுமே அறிவித்துள்ளது. மற்ற நடிகைகள் இதுவரை எதுவும் வாய் திறக்காத நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி தன்னைப் பற்றிய கிளம்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 1, 2 மற்றும் தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி அடுத்து தமிழில் எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.