‘மகாநதி’ படத்தை பார்த்த பாலசந்தர் இப்படி ஒரு வார்த்தை சொல்லுவாருனு நினைக்கல!

by Rohini |   ( Updated:2024-06-30 06:45:22  )
mahanadi
X

mahanadi

Mahanadi Movie: தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகனாக இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளைக் கடந்து இந்த தமிழ் சினிமாவில் இன்றும் தனது முத்திரையை பதித்து வருகிறார் கமல். அவருடைய ஆரம்ப கால படங்களில் இருந்து இப்போது ரிலீஸ் ஆகும் இந்தியன் 2 படம் வரைக்கும் எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு படங்களுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் தான் இருக்கும்.

ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வகையில் வித்தியாசம் காட்டியே நடிப்பவர் கமல்ஹாசன். அதில் மகாநதி படம் யாராலும் மறக்க முடியாத படம். எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காத வகையில் அதனுடைய கதைக்களம் மிகவும் சுவாரசியமாக அமைந்திருக்கும். அந்த படத்தில் உள்ள இயல்பு தன்மையும் ஒரு சராசரி மனிதனின் உணர்வுகளையும் தன்னுடைய நடிப்பின் மூலம் அழகாக காட்டியிருப்பார் கமல்.

இதையும் படிங்க: கவுண்டமணியுடன் 35 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணியாற்றும் இயக்குனர்… அட இவரா?

1994 ஆம் ஆண்டு வெளியான இந்த மகாநதி திரைப்படத்தை சந்தான பாரதி இயக்கியிருப்பார். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை எந்த அளவு புரட்டிப் போடுகிறது என்பதையும் இந்த படத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக தன் மகள் தெரியாமல் ஒரு தப்பான இடத்தில் மாட்டிக் கொள்ள அதிலிருந்து அவளை மீட்க ஒரு தந்தையாக கமல் போராடும் போராட்டத்தை பார்க்கும் பொழுது ஒவ்வொரு மனிதனின் மனமும் கலங்கத்தான் செய்யும்.

அதையும் அவருடைய நடிப்பின் மூலம் அழகாக காட்டியிருப்பார் கமல் .இந்த நிலையில் மகாநதி படத்தை பார்த்துவிட்டு அந்த காலத்தில் பாலச்சந்தர் கமலுக்கு ஒரு கடிதத்தை எழுதினாராம். அந்த கடிதத்தில் ‘என்னை நீ குருநாதர் என்பாய். இப்போது நீ இந்த தமிழ் திரை உலகுக்கு குருநாதர் ஆகிவிட்டாய்’ என பாராட்டி எழுதினாராம். அந்த கடிதத்தை கமல் இன்னும் பத்திரமாக வைத்திருப்பதாக ஒரு செய்தி இருக்கிறது. இந்த அளவுக்கு பாலச்சந்தர் பாராட்டிய படமாக மகாநதி திரைப்படம் அமைந்தது.

இதையும் படிங்க: சொல்றத மட்டும் செய்! வாய கொடுத்து மாட்டிக்கிட்ட அஜித்.. கோபத்தில் கத்திய இயக்குனர்

Next Story