Connect with us
kamal

Cinema News

‘தசாவதாரம்’ படத்தில் அந்த கேரக்டர் ஹிட்டானதுக்கு கலைஞர்தான் காரணமாம்! இவ்ளோ நாள் தெரியாம போச்சே

Dhasavatharam Movie: தமிழ் சினிமாவில் வித்தியாசமான கோணங்களில் படம் எடுப்பவர்களில் கமல் ஒரு  முன்னுதாரணமாக இருந்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் அல்லது எடுக்கும் படங்களில் நிச்சயமாக ஏதாவது ஒரு புதுமை இருக்கும். புதிய புதிய  தொழில் நுட்பங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை கமலைச் சேரும்.

அந்தளவுக்கு வெளி நாடுகளில் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களை பற்றி அறிந்து அதை நம் சினிமாவிலும் கொண்டுவரவேண்டும் என்ற முனைப்புடனேயே இன்றளவும் முயற்சித்து வருகிறார். அந்த வகையில் ஏகப்பட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்படம்தான் தசாவதாரம் திரைப்படம்.

இதையும் படிங்க: காஷ்மீர்ல அந்த ஹைனா சீன் எப்படி எடுத்தோம் தெரியுமா?.. லோகேஷ் கனகராஜ் இவ்ளோ ரிஸ்க் எடுத்தாரா?..

ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தசாவதாரம். இதை தமிழில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் என்றும் கூறலாம். படத்தில் பத்து அவதாரமாக கமல் நடித்த அத்தனை கதாபாத்திரங்களுமே இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தன.

ரங்கராஜன் நம்பி, ஜார்ஜ்புஷ், கோவிந்தராஜன், அதிகாரி கொல்டி, அமெரிக்கர், அவதார் சிங், ஜப்பானியர் கமல், பேபி, உடல் குறுகி போன பாட்டி, பூவராகவன் என பத்து அவதாரங்களை எடுத்து ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு சரியான திரைக்கதையை வடிவமைத்திருப்பார் கமல்.

இதையும் படிங்க: மீண்டும் ஜிம் மாஸ்டருடன் லாஸ்லியா!.. கமெண்ட் பக்கம் முழுக்க காதல் கதை தான் ஓடுது!..

இந்த நிலையில் தசாவதாரம் படம் எடுக்கும் போது கலைஞர் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு கமலுக்கு கிடைத்ததாம். அப்போது கலைஞர் என்னய்யா இப்போ பண்ணிட்டு இருக்க என்று அவர் தொணியில் கேட்டிருக்கிறார்.

அப்போது கமல் தசாவதாரம் படத்தை பற்றியும் அதில் அழிந்து வரும் மங்குரூஸ் காடுகளுக்கு எதிராக குரம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும் பூவராகவனை பற்றியும் கூறினாராம். அதற்கு கலைஞர் ‘புரியாதுயா இதெல்லாம். மக்களுக்கு புரியும் படி எடுக்கனும்’ என சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: தலைவர் 171-ல் இதையெல்லாம் செய்ய போறேன்!.. லோகேஷ் சொன்ன செம சர்ப்பரைஸ்!..

அப்ப எப்படி சொல்கிறீர்கள் ஐயா என கமல் கேட்க ‘மணற்கொள்ளையை பற்றி எடு’ என்று சொன்னாராம். அதன் பிறகு அந்த மங்குரூஸ் காடுகளுக்கு பதிலாக மணற்கொள்ளையை படத்தில் கொண்டு வந்த அதை எதிர்க்கும் கேரக்டராக பூவராகவனை உள்ளே நுழைத்திருப்பார் கமல்.

இந்தப் படத்தை பார்த்த கலைஞர் கமலின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாராம்.இதை ஒரு மேடையில் கமல் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top