விஜய் அரசியலுக்கு வந்தது எனக்கு பிடிக்கல!.. சீனியர் நடிகை சொல்றத பாருங்க!....

Vijay TVK: அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் சினிமாவுக்கு வந்தவர் விஜய். துவக்கத்தில் அப்பாவின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்தார். மற்ற இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் விஜயை வைத்து படமெடுக்க ஆர்வம் காட்டவில்லை. அதற்காக எஸ்.ஏ.சி பல முயற்சிகள் செய்தும் அது நடக்கவில்லை.
முதல் வாய்ப்பு: ஏனெனில் அப்போது விஜயை விட அழகான பிரசாந்த், அஜித், அரவிந்த்சாமி போன்றவர்கள் ஹீரோவாக நடித்து கொண்டிருந்தார்கள். விஜயின் மீது நம்பிக்கை வைத்து 'பூவே உனக்காக' படத்தில் அவரை நடிக்க வைத்தது இயக்குனர் விக்ரமன். அந்த படத்தின் கதை ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால் விஜயையும் பிடித்துப்போனது.
இந்த படத்தால்தான் விஜய்க்கு பெண் ரசிகைகள் உருவானார்கள். அதன்பின் பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகராக மாறினார் விஜய். ஆக்சன் படங்களில் நடிக்க துவங்கிய விஜய் அவ்வப்போது தனது படங்களில் அரசியல் தொடர்பான வசனங்களையும் பேசினார்.
அரசியல் வசனங்கள்: கத்தி, மெர்சல், சர்கார் போன்ற படங்கள் அரசியல் தொடர்பான நேரடி வசனங்கள் இடம் பெற்றிருந்தது. இதனால் அவரின் படம் ஓடும் தியேட்டர்களில் பேனர்களை கிழிப்பது, வருமான வரித்துறை சோதனை என பல பிரச்சனைகளை சந்தித்தார். அவர் நடிப்பில் உருவான தலைவா படத்தின் ரிலீஸே 2 நாட்கள் தள்ளிப்போனது.
தமிழக வெற்றிக் கழகம்: இதெல்லாம் ஏற்படுத்திய கோபம்தான் விஜயை அரசியலுக்கு கொண்டு சென்றது. பல வருடங்களாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் இதுபற்றி ஆலோசித்து வந்த விஜய் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என பெயரிட்டு விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தினார்.
அதில், ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். பொதுவாக விஜய் மிகவும் அமைதியானவர். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். தனிமை விரும்பி. மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர். அப்படிப்பட்ட விஜய அந்த மேடையில் ஆக்ரோஷமாக பேசியது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. 'விஜய் இப்படி பேசுவார் என நானே எதிர்பார்க்கவில்லை' என அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரே ஆச்சர்யப்பட்டார்.
விஜயகுமாரி: இந்நிலையில், பழம்பெரும் நடிகையான விஜயகுமாரி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘பூவே உனக்காக ஷூட்டிங்கில் விஜய் மிகவும் அமைதியாக இருப்பார். யாரிடமும் எதுவும் பேசமாட்டார். ஆனால் என்னிடம் மட்டும் நல்லா பேசுவார். நம்பியார் கூட ‘உன்னிடம் மட்டும் அவர் எப்படி பேசுகிறார்?’ என கேட்டார். அரசியல் பெரிய கடல். அதில் நீந்தி வருவது பெரிய சவால். விஜய் அரசியலுக்கு வந்ததில் எனக்கு உடன்பாடு இல்லை’ என சொல்லி இருந்தார்.