படத்த ரிலீஸ் பண்ண சொன்னா சிம்பு எத ரிலீஸ் பண்ணியிருக்கார் பாருங்க!.. வைரல் பிக்!..

Published on: December 5, 2025
---Advertisement---

சிம்புக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிம்பு தொடர்ந்து படத்தில் நடிக்க வேண்டும், சரியான இடைவெளியில் அவரின் அடுத்தடுத்த படங்கள் வெளியாக வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சிம்புக்கு அதுவெல்லாம் புரிவதில்லை. அவருக்கு எப்போது தோன்றுகிறது அப்போதுதான் ஷூட்டிங் போவார்.

ஒரு படத்துக்கு மற்றொரு படத்துக்கும் இடையே இரண்டு வருட இடைவெளியெல்லாம் விடுவார். அவரின் பத்து தல படம் வெளியாக இரண்டு வருடங்கள் கழித்து தக் லைப் படம் வெளியானது. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சரி அடுத்த படத்தையாவது சீக்கிரம் துவங்குவார் என்றால் இப்போது வரை அது நடக்கவில்லை. பார்க்கிங் பட இயக்குனர், தேசிங்கு பெரியசாமி, டிராகன் பட இயக்கனர் என சிம்புவின் 49, 50 மற்றும் 51வது படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானதே தவிர எதுவும் டேக்ஆப் ஆகவில்லை. திடீரென வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார் சிம்பு. படத்துக்கு புரமோ வீடியோவெல்லாம் எடுத்தார்கள். ஆனால், அது வெளியாகவே சில மாதங்கள் ஆகிவிட்டது. படத்திற்கு அரசன் என தலைப்பு வைத்தார்கள். ஆனால் இப்போது வரை இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்படவில்லை.

தயாரிப்பாளர் ஐசரி கணேசனிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு சொன்னபடி படத்தை நடித்துக் கொடுக்காததால் அரசன் படத்திற்கு பிரச்சனை கொடுத்து வருகிறார் ஐசரி கணேஷ். இந்நிலையில் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் தாடி, கலைந்த முடிம் கண்ணாடி என கீழே இருந்து மேலே எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘என் ரசிகர்கள் கேட்டதால்’ என பதிவிட்டிருந்தார்.

twitter

இதைப்பார்த்து சில சிம்பு ரசிகர்கள் ஃபயர் விட்டாலும் பலரும் ‘நாங்க படத்தைதான் ரிலீஸ் செய்ய சொன்னோம். நீங்கள் போட்டோவை ரிலீஸ் பண்ணி இருக்கீங்க.. சீக்கிரம் படத்தை ரிலீஸ் பண்ணு தல என பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Comment