karthick: அப்பாவ பத்தி பேசும் போது வலிக்குது.. ஃபீல் பண்ணி பேசிய கௌதம் கார்த்திக்

Published on: December 5, 2025
---Advertisement---

Karthick:

80, 90களில் கொடி கட்டி பறந்தவர் நவரச நாயகன் கார்த்திக். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன்னுடைய பெரும்பாலான படங்களை வெற்றியடையவும் செய்தவர். ஒழுங்காக ஷூட்டிங் ஸ்பாட் வரமாட்டார், கால்சீட்டும் கொடுக்க மாட்டார் என அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் சொன்ன தேதியில் வந்து விட்டார் என்றால் நடித்துக் கொடுத்துவிட்டு தான் போவார். அதுவும் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே ஃபாலோ செய்து நடிக்க கூடியவர்.

பெரிய வசனமாக இருந்தாலும் சிங்கிள் ஷாட்டிலேயே நடித்து கொடுக்கக் கூடியவர். மிகச்சிறந்த நடிகர் கார்த்திக் .ஆனால் அவர் அளவுக்கு அவருடைய மகனால் சினிமா துறையில் கால் பதிக்க முடியவில்லை. கௌதம் கார்த்திக் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு சரியான வரவேற்பு இல்லை. நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட கௌதம் கார்த்திக் தற்போது தன் அப்பா மீதான விமர்சனத்திற்கு அவருடைய கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பெயரை மாற்றிக் கொண்ட மகன்:

அது மட்டுமல்ல கௌதம் கார்த்திக் என்ற தன்னுடைய பெயரை இப்போது கௌதம் ராம் கார்த்திக் என்றும் மாற்றி இருக்கிறார். சமீபத்தில் தான் அவருடைய குலதெய்வ கோயிலை கண்டுபிடித்து வழிபாடு செய்தாராம். அதன் பிறகு தான் தன்னுடைய பெயரில் தன் தாத்தா பெயரான முத்துராம் என்பதில் ராம் என்ற பெயரை இணைத்து கௌதம் ராம் கார்த்திக் என மாற்றிக் கொண்டதாக கூறியிருக்கிறார்.

gautham

தன் அப்பா கார்த்திக் மீதான விமர்சனம் தொடர்ந்து வரும் பொழுது அது என்னை மிகவும் காயப்படுத்துகிறது. அதைக் கேட்கும் பொழுது எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது .ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது தான் தெரியும். அவரவர் வலி அவரவருக்கு தான். அதை மறுக்கவே முடியாது. உன்னுடைய பிரச்சினை பெருசு என்னுடைய பிரச்சினை பெருசு என்றும் நாம் சொல்ல முடியாது.

அன்பான வேண்டுதல்:

ஆனால் இதில் என்னுடைய வேண்டுதல் என்னவெனில் அப்படி கூறியவர்கள் அனைவருமே சீனியர்ஸ். அவர்களை பார்த்து தான் நாங்கள் வளர்கிறோம். என் அப்பா தலைமுறையில் இருந்தவர்கள். அவர்களுக்கு உண்டான நெருக்கம் அதிகமாகவே இருந்திருக்கும். இன்றைய தலைமுறையாவது அவரவர் வேலையை பார்த்துவிட்டு போய்விடுகிறார்கள். ஆனால் அந்த காலகட்டத்தில் அப்படி இல்லை.

அண்ணன் தம்பிகளாக தாய் தந்தையாக இப்படித்தான் பழகினார்கள். அப்படி இருக்கும் பொழுது இந்த பிரச்சினையை நேருக்கு நேராகவே பேசி இருக்கலாம். அப்படி பேசி தீர்த்து இருக்கலாம் .அதை விட்டு இப்படி ஒரு பொது தளத்தை பயன்படுத்தி பேசியிருக்கக் கூடாது. பொதுத்தளத்தை பயன்படுத்தி பேச எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறது .  நல்லதுக்காக குரல் கொடுக்கலாம். இருந்தாலும் அவரவர் வலி அவரவர்களுக்குத்தான் என அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் கௌதம் கார்த்திக்.

 

Leave a Comment