ஏன் சும்மா இருக்கணும்னு இதையும் கத்துக்கிட்டேன்.. இளையராஜாவிடம் இருக்கும் இன்னொரு திறமை
இளையராஜா இசை மட்டும் இல்லாமல் பாடல் எழுதவும் முயற்சி செய்திருக்கிறார். கவிஞர் வாலி கூட வெண்பாவை நான் வியக்குற அளவுக்கு வெண்பாவை எழுதுகிறார் இளையராஜா என கூறியிருந்தார். இதை பற்றி இளையராஜா ஒரு பேட்டியில் கூறும் போது இதை எழுத ஆரம்பித்தது கூட தாமதமாகத்தான் ஆரம்பித்திருக்கிறேன். 2000 ஆம் ஆண்டில்தான் எழுத ஆரம்பித்தேன் என இளையராஜா கூறினார்.
வெண்பாவை எழுத நினைத்து ஒன்று எழுதுகிறேன். ஆனால் மனசுல நினைக்கிறது வேறு ஒன்னா இருக்கு. வார்த்தையில் இலக்கண பிழை வருகிறது. இலக்கணப் பிழையை சரி செய்யணும்னா மனசுல நினைக்கிறது வரமாட்டீங்குது. அப்படியே இருக்கும் போது ஒரு கட்டத்தில் ச்சீ என தூக்கிப் போட்டு விட்டேன். 2000 ஆம் ஆண்டில்தான் சரியாக எழுத தொடங்கினேன்.
ரெக்கார்டிங் உள்ள நடக்குது. இந்த இடைவெளியில் மியூஸிக் எழுதி விட்டேன் என்றால் மாலை 7.30க்கு எல்லாம் முடிந்து விடும். 7.30க்கு மியூஸிக் போயிருச்சு என்றால் 9.00 மணிக்கெல்லாம் மியூஸிக்கை செட் பண்ணிட்டு அதுவும் இப்போது எலக்ட்ரானிக்ஸ் வந்த பிறகு அதை எல்லாம் புரோகிராம் செய்ய வேண்டியிருக்கிறது. அதை புரோகிராம் பண்றதுக்கு டைம் ஆகும்.
அந்த இடைவெளியில் ஏன் சும்மா இருக்கணும்னுதான் வெண்பாவை எழுத ஆரம்பித்தேன். அதுமட்டுமில்லாமல் புத்தகங்கள் எல்லாம் எழுத ஆரம்பித்தேன். வெண்பாவை எழுதினாலும் அதை எழுதி தூக்கிப் போட்டுவிட்டேன். இரண்டு நாள்கள் கழித்து பார்க்கும் போது என்னடா அது அங்க ஒன்னு கிடக்குதுனு பார்த்தால் நான் எழுதிய வெண்பாதான் இருந்தது.
சரி இப்படியே விடக்கூடாது. அப்படி எழுதுவதில் என்னதான் கஷ்டம் இருக்குதுனு மேலும் எழுத ஆரம்பித்து ஆரம்பித்து வரும் புலவர்கள் எல்லாம் வியக்குற அளவுக்கு எழுத ஆரம்பிச்சுட்டேன் என இளையராஜா ஒரு பேட்டியில் கூறினார். உலக இசை மேதைகள்தான் சிம்பொனி இசையில் கைதேர்ந்தவர்கள். பெரிய மேடை. அந்த ஒரு மேடையில் 70 அல்லது 80 கலைஞர்கள் சேர்ந்து இசைக்கக் கூடிய வகையில் பார்த்திருக்கிறோம்.இப்போது மார்ச் 8 ஆம் தேதி இளையராஜாவும் சிம்பொனி இசையை நடத்த இருக்கிறார்.