வருஷம் 16:
1989 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் வருஷம் 16. ஒரு அழகான காதல் திரைப்படமாக இந்த படம் வெளியானது .பாசில் இந்தப் படத்தை இயக்கினார். படத்தில் கார்த்திக் மற்றும் குஷ்பூ ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற எண்ணம் கண்ணட்டண்ணே படத்தின் ரீமேக் தான் வருஷம் 16 திரைப்படம்.
இந்த படத்தில் கார்த்திக்கின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்காக அவருக்கு பிலிம் பேர் விருதும் வழங்கப்பட்டது. வணிக ரீதியாகவும் இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் நடித்திருப்பார். படத்தில் கார்த்திக் மற்றும் குஷ்புவின் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் வொர்க் அவுட் ஆனது. ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், அதில் இருந்து உருவாகும் காதல் இவைகளை மையப்படுத்தி இந்த படம் நகரும்.
கார்த்திக் – குஷ்பு கெமிஸ்ட்ரி:
அதற்காக ஒரு பெரிய வீடு அரண்மனை போல படத்தில் காட்டி இருப்பார்கள். எப்போதுமே கலகலவென இருக்கும் குடும்பம். சின்ன குழந்தைகள் நடுத்தர வயதினர் பெரியவர்கள் என அந்த குடும்பமே குதூகலமாக இருக்கும். இதில் வெளியூரிலிருந்து வந்து இறங்கும் குஷ்பு, அந்த வீட்டில் உள்ள கார்த்திக் காதலிப்பார். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே மோதல்கள் இருந்தாலும் போகப் போக அது காதலாக உருவெடுக்கும்.

எல்லாவற்றையும் தாண்டி இந்த படத்தில் கார்த்திக் மிக அழகாக இருப்பார். இந்த படம் வெளியான அந்த நேரத்தில் கார்த்திகை பார்த்து மயங்காத பெண்களே இல்லை என்று கூறலாம். இந்த நிலையில் கார்த்திக்கின் ஒரு பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் வருஷம் 16 திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை எடுத்து கூறி இருக்கிறார்.
அரண்டு போன கார்த்திக்:
அதாவது ஒரு நேரத்தில் சந்தோஷமாக இருந்த குடும்பம். அந்த போர்ஷனை எல்லாம் எடுத்து முடித்துவிட்டு அந்த வீட்டை பூட்டி விட்டாராம் படத்தின் இயக்குனர் பாசில். நீண்ட வருடங்கள் கழித்து கார்த்திக் ஜெயிலில் இருந்து வருவார். அப்போது அந்த வீடு நூலாம்படை படர்ந்து எங்கு பார்த்தாலும் தூசியாக இருக்கும். இதை live ஆகவே படமாக்கியிருக்கிறார் பாசில். சந்தோஷமாக இருக்கும் போர்ஷன்களை எல்லாம் முதலில் எடுத்துவிட்டு அந்தவீட்டை பூட்டை விட்டாராம் பாசில்.
திரும்ப வரும் போது உள்ளே போய் பார் என கார்த்திக்கிடம் பாசில் கூறியிருக்கிறார். கார்த்திக்கும் ஜனகராஜும் வீட்டை திறந்து பார்க்க கார்த்திக்கு குபீர் என ஆகிவிட்டதாம். எப்படி இருந்த வீடு? என நினைத்து உண்மையிலேயே கார்த்திக் ஜனகராஜின் கையை பிடித்தவாறு வெளியில் உள்ள திண்ணையில் அமருவார். இதை தத்ரூபமாக அப்படியே காட்சிபடுத்தியிருக்கிறார் பாசில். வழக்கமாக ஒரு டான்ஸுக்கு செட் போடுகிறார்கள் என்றால் முதல் நாள் அந்த செட் எப்படி இருக்கிறது என்று போய் பார்ப்பார்கள். ஆனால் பூட்டிய வீட்டை பாசில் யாருக்கும் காண்பிக்கவில்லையாம். அந்த சீன் எடுக்கும் போதுதான் வீட்டையே பார்த்திருக்கிறார்கள்.
