keerthy Suresh: விஜய்க்காக பேசி மாட்டிக் கொண்ட கீர்த்தி.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சம்பவம்

Published on: December 5, 2025
---Advertisement---

கீர்த்தி சுரேஷ்: 

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குளில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ரிவால்வர் ரீட்டா. ஒரு காமெடி பின்னணியில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலேயே சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ரிவால்வர் ரீட்டா படத்தின் புரோமோஷனுக்காக ஐதராபாத் சென்றிருந்த கீர்த்தி சுரேஷ் அங்கு உள்ள சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அவர் மன்னிப்பு கேட்டதற்கு பின்னாடி ஒரு சம்பவமே நடந்திருக்கிறது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு முக்கிய நடிகையாக கருதப்படுபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் திருமணத்திற்கு பிறகு கீர்த்தியின் நடிப்பில் சொல்லிக் கொள்ளும்படி படங்கள் அமையவில்லை. ரிவால்வர் ரீட்டா படத்திற்கு முன் ரகுதாத்தா படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

ரகுதாத்தா படத்தின் புரோமோஷன் நேரத்தில் ஐதராபாத்தில் பத்திரிக்கையாளர்கள் கீர்த்தி சுரேஷிடம் உங்களுக்கு சிரஞ்சீவி நடனம் பிடிக்குமா அல்லது விஜயின் நடனம் பிடிக்குமா என்று கேட்டனர். அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் விஜயின் நடனம் ரொம்ப பிடிக்கும் என கீர்த்தி சுரேஷ் சொல்லியிருப்பார். அந்த நேரத்தில் அவர் அசால்ட்டா சொன்னாலும் அதிலிருந்து சிரஞ்சீவி ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

keerthy

ஏனெனில் தெலுங்கில் ஒரு மெகாஸ்டாராக இருப்பவர் சிரஞ்சீவி. அதுவும் நடனத்திலும் கைதேர்ந்தவர். மிகவும் ஸ்பீடாகவும் ஆடுபவர். அப்படி இருக்கும் போது கீர்த்தி சுரேஷ் இப்படி சொல்லிவிட்டாரே என ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை கடுமையாக விமர்சித்தனர். அதனால் இதற்கு சமீபத்தில் விளக்கம் கொடுத்து அதற்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

ரிவால்வர் ரீட்டா படத்தின் புரோமோஷன் ஐதராபாத்தில் நடக்கும் போது சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு  கேட்டுக் கொள்கிறேன். சின்ன வயதில் இருந்து நான் விஜயின் நடனத்தை பார்த்துதான் வளர்ந்து வருகிறேன். அதனால்தான் அன்று அப்படி சொல்லிவிட்டேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதாவது ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால் அதை எப்படி கடந்து போக வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வது திரைத்துறையில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இல்லையென்றால் மாட்டிக் கொள்வார்கள்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment