ஒண்ணுமே தெரியாம நீ எல்லாம் ஏன் நடிக்க வந்தே? எம்ஜிஆரைத் திட்டித் தீர்த்த இயக்குனர்
எம்ஜிஆர் ஆரம்ப கால கட்டத்தில் படம் நடிக்க வரும்போது கடும் சவால்களை சந்தித்தார். அப்போதுதான் அந்தப் படத்தில் முதலில் துப்பறியும் வேஷம் கொடுத்தாங்க. அதை வேற ஒருவரிடம் கொடுத்துட்டார். அப்புறம் கதாநாயகனின் நண்பனாக வேடம் கொடுத்தார். அதையும் வேறொருவரிடம் கொடுத்து விட்டார்கள்.
அதன்பிறகு இன்ஸ்பெக்டர் வேடத்தைக் கொடுத்தாராம். அடுத்தடுத்து வேடம் மாற, எம்ஜிஆர் அண்ணன் சக்கரபாணியுடன் வருத்தத்துடன் இதுபற்றி தெரிவித்துள்ளார். உடனே எது கிடைக்குதோ அதைப் பிடித்துக் கொண்டு முன்னேறுவது தான் வாழ்க்கைன்னு சொல்றாரு.
அப்புறம் இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் வருகிறார். அவர் ஒரு அமெரிக்க இயக்குனர். இன்ஸ்பெக்டருக்கான உடைகளையும் கொடுத்து படத்தின் காட்சியைப் பற்றி விவரிக்கிறார். அப்போது சைக்கிள் ஓட்டி வர வேண்டும் என்கிறார். 'எனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது' என்கிறார் எம்ஜிஆர்.
'அப்படின்னா எல்லாத்தையும் கத்துக்கிட்டு வா'ன்னு திட்டுகிறார். அப்புறம் அவருக்கான உடை தைக்கப்பட்டு இருக்கு என்பதால் அவருக்கு சைக்கிள் ஓட்டாமலேயே அவருக்கான காட்சி எடுக்கப்படுகிறது. இயக்குனரின் அறிவுரைப்படி நடிக்காமல் அவர் வேறொரு மாதிரி நடித்து விட மீண்டும் இயக்குனர் திட்டுகிறார்.
'நான் ஒரு மாதிரி சொல்லிக் கொடுத்தா நீ ஒரு மாதிரி நடிக்க... இனி நீ நடிக்க வேண்டாம். போ' என்று சொல்லி திட்டி அனுப்பி விடுகிறார். இந்தக் காட்சி அப்படியே இருக்கட்டும்னு எரிச்சல் படுகிறார். பல பிரச்சனைகளுக்கு மத்தயில் முதல் நாள் சூட்டிங்கில் எம்ஜிஆர் நடித்து முடிக்கிறார்.
அடுத்து எம்ஜிஆர் பாட வேண்டிய காட்சி. எம்ஜிஆருக்கு சுத்தமாகப் பாடவே தெரியாது. அது பிடிக்கவும் செய்யாது. இயக்குனரிடம் 'எனக்குப் பாட வராது' என்கிறார். மீண்டும் கோபப்படுகிறார்... இயக்குனர். 'அப்படின்னா எந்த நம்பிக்கையில நடிக்க வந்துருக்க...'ன்னு காரசாரமாகத் திட்டுகிறார்.
இதற்கிடையில் கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணன் எம்ஜிஆருக்கு ஒரு ஐடியா கொடுத்து அவரைப் பாட வைக்கிறார். அதை சவாலாக எடுத்துக் கொண்டு எம்ஜிஆரும் பயிற்சி எடுத்து அந்தக் காட்சியில் பாடி தப்பித்து விடுகிறார்.
அவரது முதல் பட அனுபவம் இதுதான். 3 முறை அவரது வேடங்கள் மாற்றப்படுகிறது. அந்தப் படத்தில் தான் நடிக்கிறோமா இல்லையா என்றே அவருக்கு சந்தேகம் வந்தது என்றே சொல்ல வேண்டும். அது தான் சதிலீலாவதி படம். இது வெளியாகி மாபெரும் வெற்றியும் பெற்றது.