Samantha: ரகசிய திருமணம் செய்து கொண்டாரா சமந்தா?!… வெளியான அப்டேட்!

Published on: December 5, 2025
---Advertisement---

சமந்தா:
தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தாவின் வாழ்க்கையில் ஏறு முகம் என்றே சொல்லலாம். தொடர்ந்து படங்களில் நடித்தார். விளம்பர படங்களிலும் நடிதத்தார். சொல்லப்போனால் அவருடைய விவாகரத்திற்கு பிறகு தான் சமந்தாவின் மார்கெட் உயர்ந்தது என்று சொல்லலாம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் சமீப காலமாக சமந்தாவை பற்றிய ஒரு வதந்தி பரவிக் கொண்டிருக்கின்றது.

வெளியான புகைப்படங்கள்:

இந்தி இயக்குனரான ராஜ்  நிடுமொருவை அவர் காதலித்து வருவதாகவும் அடிக்கடி அவர்கள் வெளியில் சுற்றும் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் இன்று சமந்தாவும் ராஜ் நிடிமொருவும் திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தி ஃபேமிலி மேன், சிட்டடெல் ஆகிய வெப் சீரிஸில் சமந்தா நடித்திருந்தார். இந்த இரண்டு சீரிஸ்களையும் இயக்கியவர் ராஜ் நிடிமொருதான்.

அதிலிருந்து இருவருக்கும் இடையில் நட்பு உருவானது. அது மெல்ல மெல்ல காதலாக மாறியது. எந்த விழாக்கள் ஆனாலும் பண்டிகை ஆனாலும் இருவரும் சேர்ந்து கொண்டாடுவது ராஜ் குடும்பத்தினரை சமந்தா சந்திப்பது என தொடர்ச்சியாக அது சம்பந்தமான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. ஒரு பதிவில் கூட சமந்தா கடந்த ஒன்றரை வருடங்களாக நான் துணிச்சலான சில முடிவுகளை என் வாழ்க்கையில் எடுத்து வருகிறேன்.

விவாகரத்துக்கு பின்;

samantha

ரிஸ்க் எடுப்பது உள்ளுணர்வை நம்புவது முன்னேறும் ஒவ்வொரு கட்டத்திலும் கற்றுக் கொள்கிறேன். உண்மையான நபர்களுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இது வெறும் ஆரம்பம் என்று எனக்கு தெரியும் என கூறியிருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா நான்காண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார் நாகசைதன்யா. ஆனால்  திருமண வாழ்க்கைக்குள் நுழையாத சமந்தா இன்று ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா பவுண்டேஷனில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவில் அதிகாரப்பூர்வமாக இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment