Jana Nayagan: ஜனநாயகன் டப்பிங் பணியில் விஜய், பூஜா ஹெக்டே?.. ஆனா விஷயமே வேற!..

Published on: December 5, 2025
---Advertisement---

jan nayagan

விஜய் நடிப்பில் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள படம் ஜன நாயகன். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி பெரிய் ஹிட் அடித்த பகவத் கேசரி ரீமேக் என்று பல்ர் கூறுகின்றனர்.  படம் தொடர்பான போட்டோகளும் அதனை உறுதி செய்வதாக இருக்கிறது. அரசியல் கட்சி துவங்கியுள்ள விஜய்க்கு இது இறுதி படம் என்பதால கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

jan nayagn

ஜனநாயகன் படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. தளபதி கச்சேரி என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்தன் ஜனநாயகன் டப்பிங் பணியில் விஜய், பூஜாஹெக்டே ஆகியோர் ஈடுபட்டிருப்பதாக கூறி அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. பலரும் அதை உண்மை என்றே நம்பினார்கள். ஆனால், அது AI தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்பது பின்னர்தான் தெரிய வந்தது. உண்மையில் ஜனநாயகன் டப்பிங் பணி இன்னமும் துவங்கப்படவில்லை. மற்றவர்கள் பேசிவிட்டார்களா என்பது தெரியவில்லை. ஆனால், விஜய் இன்னமும் டப்பிங் பேசவில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

jana nayagan

 

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment