எந்த ரசிகர்களும் இல்லாத ஏரியாவில் தான் நடக்கணும்!... லைகாவை வச்சு செய்யும் அஜித்… சும்மா இருந்து இருக்கலாமோ?
Ajithkumar: தமிழில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் செய்வது பார்த்து கோலிவுட் வட்டாரமே குழம்பி போய் இருக்கின்றனர். கிட்டத்தட்ட விடாமுயற்சி படக்குழுவுக்கு அவர் செய்வது பெரிய கலவரத்தினையே ஏற்படுத்தி இருப்பதால் அவர்களும் கூட கடுப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
விடாமுயற்சி என்ற படத்தின் பெயர் அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட பல மாதங்கள் கழித்து தான் ஷூட்டிங்கிலே கலந்து கொண்டார் அஜித். அந்த இடைப்பட்ட காலத்தில் இப்போ வருவாரா? அப்போ வருவாரா எனப் படக்குழு பெரிய காத்திருப்புக்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க: ரைட்டு… அடுத்ததா? தளபதி69ஐ இயக்க போவது இந்த இயக்குனரா? ஆனா நடக்குமா?
இதில் திரிஷா வேறு தற்போது மீண்டும் டிரெண்டிங்கில் இருப்பதால் அவருக்கும் அது பிரச்னையை கொடுத்தது. இந்த படத்திற்கு கொடுத்த கால்ஷீட் காலாவதியாக விடாமுயற்சி குழு மற்ற படத்தின் கால்ஷீட்டில் கையை வைத்தது. இதுவே திரிஷாவிற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியது.
இன்னும் சில மாதம் தானே முடிச்சி விட்ரலாம் என அவர் நினைத்து கொண்டு இருக்கும் போது தற்போது இன்னொரு பிரச்னை உருவாகி இருக்கிறது. முதலில் அஜர்பைனானில் ஷூட்டிங் போனது அஜித்தின் வேண்டுக்கோளுக்கு இணங்க தானாம். அதாவது ஷூட்டிங்கிற்கு எந்த ரசிகரும் வரக்கூடாது என்பதால் பல மைல் தாண்டி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் அங்கும் இயற்கை சதி செய்ய தற்போது படக்குழுவே அஜர்பைனாலில் படத்தின் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். அடுத்த ஷெட்யூல் எங்கு நடத்தலாம் என்ற சர்ச்சை ஒரு பக்கம் என்றால் இன்னும் சில நாட்களில் ஷூட்டிங்கை முடிக்க வேண்டிய கட்டாயம் ஒரு பக்கம் என்பதால் இயக்குனர் மகிழ் திருமேனி குழப்பத்தில் இருக்காராம்.
இதையும் படிங்க: இனிமே நான் நடிக்க மாட்டேன்!.. சிவாஜி படத்தின் படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய பானுமதி…
அதுமட்டுமல்லாமல் படக்குழு கொடுத்த பட்ஜெட்டை விட எக்கசக்கமாக செலவை இழுத்துவிட்டு வருகின்றனராம். அதாவது ஒரு லைட்டை துருக்கியில் வாங்க அதன் விலையை கேட்ட லைட்மேன் அதிர்ச்சி அடைந்தாராம். இதற்கு பாதி அவுட்டோட் யூனிட்டே வாங்கிடலாம் எனக் கூறும் அளவுக்கு படக்குழு தாராள செலவை இழுத்துக்கொண்டு வருவதும் லைகா நிறுவனத்துக்கு பிரச்னையாகி இருக்கிறது.
இந்த சிக்கலை தாண்டி படத்தினை சீக்கிரம் முடித்து அஜித்தினை ப்ரீ செய்து விட வேண்டும் என்றும் அஜித் தரப்பில் அழுத்தம் ஒரு பக்கம் அதிகரித்து கொண்டே இருக்க இதில் இயக்குனர் நிலைமை தான் அந்தோ பரிதாபமாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது.
இதையும் படிங்க: எஸ்.ஏ.சி-விஜய் மோதல் இந்த படத்தில் தொடங்கியது தானா? முக்கிய காரணமான சங்கீதா…