Cinema History
ஹாலிவுட் பட வசூலை தட்டி தூக்கிய எம்.ஜி.ஆர்!.. நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன ஹாலிவுட் ஹீரோ!.
தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். ஹீரோவுக்கு என தனி இமேஜை உருவாக்கிய நடிகர் இவர். அதாவது தயாரிப்பாளர் வசம் இருந்த திரையுலகம் ஹீரோவின் கைக்கு போனது என்றால் அது எம்.ஜி.ஆர் வந்த பிறகுதான். அதிலும் அவர் மட்டுமே அப்படி இருந்தார்.
ஆனால், அந்த இடத்தை பிடிப்பதற்கு முன் அவர் பல அவமானங்களை சந்தித்துள்ளார். ஏழு வயதில் நாடகங்களில் நடிக்க துவங்கி சுமார் 30 வருடங்கள் நடித்தார். 37 வயதில் சினிமாவில் நுழைந்த அவர் 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். 47 வயதில் ராஜகுமரி படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இதையும் படிங்க: இறப்புக்கு முன் கடைசியாக என்னிடம் எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!.. பிரபல நடிகை உருக்கம்…
அதன்பின்னர்தான் பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக மாறினார். சிவாஜி செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த குடும்ப படங்களில் நடித்தால் எம்.ஜி.ஆரோ அதிரடி சண்டைக்காட்சிகள் கொண்ட படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆருக்கு என தனி ரசிகர் கூட்டமே உருவானது.
தமிழகத்தில் ஆங்கில படங்களுக்கு எப்போதும் ஒரு வரவேற்பு உண்டு. 1969ம் வருடம் வெளிவந்த மெக்கனஸ் கோல்ட் என்கிற திரைப்படம் சென்னையில் நன்றாக ஓடியது. அண்ணாசாலையில் உள்ள தேவி பாரடைஸ் திரையரங்கில் 100 நாட்களுக்கும் மேல் முன்பதிவிலேயே ஓடியது. இது பெரிய ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!.. கோபப்பட்ட வாலிக்காக விழாவை கேன்சல் பண்ண சொன்ன எம்.ஜி.ஆர்!..
அந்த காலகட்டத்தில் 100 நாட்கள் முன்பதிவிலேயே ஓடிய ஒரே படம் இதுதான். இந்த சாதனையை முறியடித்த ஒரே நடிகர் எம்.ஜி.ஆர்தான். அவர் தயாரித்து, இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் அதே தேவி பாரடைஸ் தியேட்டரில் மெக்கன்ஸ் கோல்ட் படத்தை விட அதிகநாட்கள் முன்பதிவிலேயே ஓடியது. இந்த படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து எம்.ஜி.ஆர் அமெரிக்கா போனார்.
அந்த அமெரிக்க பயணத்தின்போது மெக்கனஸ் கோல்ட் படத்தின் ஹீரோ கிரிகரி பேக்-ஐ சந்தித்தார். எம்.ஜி.ஆர் எங்கிருந்து வருகிறார். அவரின் படம் என்ன சாதனையை செய்திருக்கிறது என்பதெல்லாம் அவருக்கு முன்பே சொல்லப்பட்டது. எம்.ஜி.ஆரை பார்த்ததும் ‘எனது இந்திய சாதனையை முறியடித்த சாதனையாளரே வருகே’ என வரவேற்றாராம் கிரிகரி பேக். இப்படி உலகம் முழுவதும் பிரபலமான ஒரு நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் மாநாட்டுக்கு சென்று செம அடி வாங்கிய ரஜினிகாந்த்… அப்போதே ஏழாம் பொருத்தம் ஆரம்பிச்சிட்டோ?