ஓவரா இருக்கு.. அடக்கி வாசி!. ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜெயலலிதாவை கண்டித்த எம்.ஜி.ஆர்...
Jayalalitha: 30 வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு போனவர் எம்.ஜி.ஆர். அதன் பின்னரும் 10 வருடங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன்பின்னரே ஹீரோவாக மாறினார். நடிப்புதான் அவரின் தொழில் என்றாலும் இயக்கம், தயாரிப்பு பற்றியும் அவர் கற்றுக்கொண்டார்.
ஒரு காட்சிக்கு ஒரே கேமரா கோணத்தை எப்படி வைக்க வேண்டும், ஒரு காட்சியை எப்படி எடுத்தால் அது திரையில் எப்படி வரும் என்பதெல்லாம் எம்.ஜி.ஆருக்கு அத்துப்படி. அதனால்தான் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கிய சில வருடங்களிலேயே 'நாடோடி மன்னன்' என்கிற படத்தை தயாரித்து, இயக்கி நடித்தார்.
இதையும் படிங்க: இவனையெல்லாம் ஏன் உள்ள விட்டீங்க!. சிவாஜியை அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர் பட இயக்குனர்…
அந்த படத்தை இயக்கும் போது எம்.ஜி.ஆர் பல பிரச்சனை சந்தித்தார். ஆனாலும், வெற்றிகரமாக அதை சமாளித்து அப்படத்தை வெளியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் உலகம் சுற்றும் வாலிபன் என்கிற படத்தையும் தயாரித்து, இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனவர் அவர்.
சில சமயம் இயக்குனரால் படப்பிடிப்பு தளத்திற்கு வரமுடியவில்லை எனில் இயக்குனரின் அனுமதியுடன் அன்று எடுக்க வேண்டிய காட்சிகளை எம்.ஜி.ஆரே எடுத்துவிடுவார். எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தபின் அடுத்த படமாக ரகசி போலீஸ் 115 என்கிற படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார் ஜெயலலிதா.
அந்த படத்தின் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவுக்கு ஒருநாள் உடல்நிலை சரியில்லை. படப்பிடிப்பை ரத்து செய்தால் மறுபடியும் நடிகர், நடிகைகளின் கால்ஷீட் கிடைக்காது என்பதால் அன்று எம்.ஜி.ஆரையே காட்சிகளை எடுக்கும்படி தொலைப்பேசியில் சொல்லிவிட்டார். ஜெயலலிதா ஆண் போல வேடமணிந்து நடிப்பதுதான் அன்றைய காட்சி. இதில் மகிழ்ச்சியடைந்த ஜெயலலிதா ஆண் போல வேஷம் எல்லாம் போட்டு ஆண் போலவே படப்பிடிப்பு தளத்தில் நடந்து கொண்டிருந்தார். காட்சிகளிலும் நடிக்கும்போதும் ஒரு விரைப்புத்தன்மையோடே நடித்தார்.
இதையும் படிங்க: அசோகனை செல்லமாக அழைத்த எம்.ஜி.ஆர்!… பதறி போய் காலை பிடித்து கதறிய சம்பவம்…
அவரை தனியே அழைத்து சென்ற எம்.ஜி.ஆர் ‘ இப்போது நீ நடிப்பது ஆண் போன்ற வேஷம்தான். அதற்காக ஆண் போலவே மாறக்கூடாது. ஒரு பெண் ஆண் வேஷம் போட்டு நடிக்கிறாள். எனவே, ஆண் போன்ற விரைப்பு அதேநேரம் ஒரு பெண்ணுக்குண்டான நளினமும் உன் உடல் மொழியில் வர வேண்டும். அத மறந்துடாதே’ என சொல்லிகொடுத்தார். அதன்பின் அவர் சொன்னபடியே ஜெயலலிதாவும் நடித்தார்.
இதுபற்றி ஒருமுறை பேசிய ஜெயலலிதா ‘ஒரு வாத்தியார் போல எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என அவர் சொல்லிக்கொடுத்தார். அதேநேரம், என்னை அவர் கண்டிப்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக என்னை தனியே அழைத்து சென்று அதை அவர் சொன்ன விதம் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. அதனால்தான் அவர் வாத்தியார்’ என சொன்னார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டும் நடக்காமல் போன ஒரே விஷயம்… தடையாக இருந்த அரசியல்….