Connect with us

Cinema News

பாக்ஸ் ஆபிஸில் பின்னி பெடலெடுக்கும் பிரபாஸின் சலார்!.. 2 நாட்களில் இத்தனை கோடி வசூலா?..

பிரபாஸின் சலார் படத்திற்கு என்னதான் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சூறாவளியை நடத்தி வருகிறது சலார் என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ வசூல் இதுதான் என பாக்ஸ் ஆபிஸ் நம்பர்களை பார்த்து இந்திய சினிமாவே ஆடிப் போய் உள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ஸ்ரேயா ரெட்டி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள சலாம் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி வெளியானது.

இதையும் படிங்க: கடைசி வரை கண்டுக்காத வடிவேலு!.. வீட்டிலேயே திடீரென சுருண்டு விழுந்து இறந்த போண்டா மணி

ஒரு பக்கம் ஷாருக்கானின் டங்கி திரைப்படம் போட்டியிட்டு வரும் நிலையில், அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை சலாம் திரைப்படம் எட்டி உள்ளது. முதல் நாளில் அதிகபட்சமாக 178 கோடி ரூபாயை சலார் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் நாளான சனிக்கிழமை சற்றே சரிவை சந்தித்த நிலையில், 80 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாகவும் ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் 250 கோடி ரூபாய் வசூலை சலார் தாண்டி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞாயிற்றுக்கிழமை இன்று மீண்டும் சலார் படத்தின் வசூல் சூடு பிடித்தால் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்றும் 300 கோடி கிளப்பில் இணையும் என்றும் 4வது நாளான திங்கட்கிழமையும் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் 4 நாட்களில் கோடி ரூபாய் வரை இந்த படம் வசூல் இட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: குளூர்ல நீ வேற டெம்பரேச்சர் ஏத்தி கொல்லுறியே!.. மொத்த அழகையும் காட்டும் மாளவிகா!…

google news
Continue Reading

More in Cinema News

To Top