சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம்தான் பராசக்தி. விஜயின் ஜனநாயகன் படத்தோடு இந்த படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதில், கோபமடைந்த விஜய் ரசிகர்கள் இந்த படத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர்.
குறிப்பாக படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். ஒருபக்கம், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததால் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. படம் வெளியாகி 2 நாட்களில் இப்படம் 50 கோடி வசூல் செய்ததாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், அது போலியானது என விஜய் ரசிகர்கள் சொன்னார்கள்.
படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் இப்படம் 50 கோடியை கூட வசூல் செய்யவில்லை என செய்திகள் வெளியானது. தற்போது பராசக்தி படத்தின் வசூல் சிங்கிள் டிஜிட்டுக்கு போய்விட்டது. தமிழகத்தில் 550 தியேட்டர்களில் படம் வெளியானதால் பல தியேட்டர்களிலும் இப்படம் இப்போது காத்து வாங்குகிறது.

இந்நிலையில், பராசக்தி ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என பிரபல மல்டிப்பிளக்ஸ் தியேட்டரான PVR அறிவித்திருக்கிறது.




