ஒண்ணும் அவசரமில்லை!.. ஒழுங்கா கதையை எழுதிட்டு தலைவர் படம் பண்ணு.. லோகிக்கு வந்த நிலைமைய பார்த்தீங்களா?..

ஆரம்பத்தில் லோகேஷ் கனகராஜ் வந்தால் நமக்கு பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கிடைக்கும் என ரஜினிகாந்த் வளைத்துப் போட்டதாக சொன்னது போய் தற்போது லோகிக்கு பெரிய ஹிட் கொடுக்க தலைவர் வேண்டும் என்கிற நிலைமை மாறிவிட்டது என ரஜினிகாந்த் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

கைதி, மாஸ்டர், விக்ரம் என மாஸ் காட்டி வந்த லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் எல்சியூ கான்செப்ட்டை கைதி படத்துடன் இணைத்து காண்பித்த நிலையில், பையன் மார்வெல் அளவுக்கு யோசிக்கிறானே என பலரும் பாராட்டினர்.

இதையும் படிங்க: மனதளவில் அப்செட்டான வேர்ல்ட் நடிகர்!.. எல்லாத்துக்கும் காரணம் அந்த போட்டியாளரின் நண்பர் தானாம்!..

விஜய்யின் லியோ திரைப்படம் எல்சியூவாக வர வேண்டும் என்றும் ஸ்டாண்ட் அலோன் படமாக வந்தாலே நல்லா இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்கள் விருப்பங்களை தெரிவித்து வந்தனர். ஆனால், கடைசியில் இரண்டும் கெட்டான் படமாக ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தில் எல்சியூவை திணித்து ஒரு படமாக லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்தார்.

படம் பார்த்த ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியில்லை என சொல்லிவிட்ட நிலையில், பாதி சாப்பாடே பொய்யான சாப்பாடு என அதற்கு ஒரு தியரியை கொண்டு வந்து மேலும், ரசிகர்களை சோதித்து விட்டார்.

இதையும் படிங்க: சுத்தமா நடிக்கவே வரல!.. படிச்ச படிப்புக்கேத்த வேலையை பார்க்க கிளம்பிட்டாரா ஷங்கர் பொண்ணு?..

இந்நிலையில், அடுத்த வாரம் முதல் தலைவர் 171 படத்துக்கான ஸ்க்ரிப்ட் எழுதப் போகிறேன் என்றும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் என்பதையும் விழா ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் கூறினார்.

அதை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள், ”We : ஐயா லோகேஷ் #Leo மாதிரி குப்பைலாம் இல்லாம பொறுமையா நிதானமா நல்ல ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு வாங்க ஒன்னும் அவசரம்ல்ல.....

ஏன்னா இப்பதான் தம்பிகிட்ட ஒரு ப்ராஜெக்ட் வாங்கணோம் அது ரொம்ப நல்லாவே ஓடிட்டு இருக்கு” என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story