Connect with us

Cinema History

மூன்று முகம் படத்தில் ரஜினிக்கு வந்த இரண்டு சந்தேகம்.. சும்மா நடிக்காம இதெல்லாம் செய்வாங்களா?

Rajinikanth: தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் தங்களுக்கு கொடுத்ததை அப்பட்டமாக நடிப்பார்கள். அதில் பிரச்னை இருந்தால் கூட அதை யோசிக்கவே மாட்டார்கள். ஆனால் ரஜினி தன்னுடைய ஒவ்வொரு காட்சிக்கு பின்னாலும் அத்தனை ரிஸ்க் எடுப்பது மட்டுமல்லாமல் தப்பு இருந்தாலும் சுட்டிக்காட்டுவாராம்.

அப்படிதான் அவரின் மூன்று முகம் படத்திலும் நடந்ததாம். ஏ.ஜெகநாதன் இயக்கிய இப்படத்துக்கு கதை, வசனம் எழுதியவர் பிரபல இயக்குனர் பீட்டர் செல்வகுமார். அப்போது ரஜினிக்கும், இவருக்கும் ஒரு நெருக்கமான நட்பு ஒன்று உருவானதாம். இப்படத்தில் ரஜினிக்கு மொத்தமாக மூன்று வேடம்.

இதையும் படிங்க: 3 படத்துக்கு சம்பளம் என்னாச்சு? கமலை நம்பி கெரியரை தியாகம் செய்த நடிகை – உண்மையிலேயே கெத்துதான்

அப்பா வேடத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அந்த ரோலுக்கு மீசை, தாடியுடன் கொஞ்சம் முரட்டுத்தனம் தேவைப்பட பொய்யான தாடையை கூட சேர்த்து இருப்பாராம். அப்போ வில்லன் செந்தாமரைக்கும், இவருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் நீண்ட வாக்குவாதம் இருக்குமாறு ஒரு காட்சி இருந்தது.

அதை முடித்துவிட்டு வந்த ரஜினிகாந்த், பீட்டர் செல்வக்குமாரிடம், ஒரு சாராய முதலாளியுடன் போலீஸ் ஏன் பேச வேண்டும்? தூக்கி உள்ளே போட்டால் முடிந்துவிடும் தானே என்றாராம். வில்லன் பெரிய ஆள். அவனை யாரும் தொட முடியாது என்று இருந்தால் தான் கதை வலுவாகும் என்றாராம். அதன் பின்னரே ரஜினி அதுக்கு ஒப்புக்கொண்டாராம்.

இதையும் படிங்க: 75 கோடி கடனை தயாரிப்பாளர் தலையில் கட்டிய எஸ்.கே. ஐயோ பாவம் மனுஷன்!…

பின்னர் மகன் ரஜினியை கராத்தே தெரிந்த ராதிகா அடிப்பது போல காட்சி இருக்கும். அதை ரஜினியிடம் கொண்டு சென்ற யூனிட் ஆட்கள் உங்களை ராதிகா அடிப்பது போல காட்சி இருந்தால் உங்க இமேஜ் பாதிக்கும் என்றனர். ரஜினி வந்து பீட்டர் செல்வகுமாரிடம் நிற்க, அவர் வில்லன் ரஜினியை தான் அடிக்கிறோம். மேலும் கராத்தே தெரிந்த ராதிகாவிடம் தானே பிரச்னை வராது என்றாராம்.

இதெல்லாம் நடந்து முடிந்த போது உங்க வேலையில் தலையீடுகிறேனா எனக் கேட்டு இருக்கிறார். ஆனால் அவரோ அப்படியெல்லாம் இல்லை சார். சும்மா வந்தோம். நடித்தோம் என்று இல்லாமல் உங்களுக்கு தோணியதை சொல்றதே நல்லது தான். சரியென்றால் ஏத்துக்கொள்ள போகிறோம். இல்லையென்றால் புரிய வைக்க போகிறோம் என்றாராம்.

இதையும் படிங்க: நானும் சூரியும் பேசிட்டோம்! விஷ்ணு விஷால் சொன்னதுக்கு பின்னாடி இவ்ளோ நடந்திருக்கா?

google news
Continue Reading

More in Cinema History

To Top