Connect with us

Review

ரத்தம் தெறிக்க தெறிக்க எதிரிகளை வேட்டையாடும் விஷால்.. எல்லாம் யாருக்காக தெரியுமா?.. ரத்னம் விமர்சனம்!

விஷால், பிரியா பவானி சங்கர், கெளதம் மேனன், சமுத்திரகனி, யோகி பாபு மற்றும் முரளி ஷர்மா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி உள்ள ரத்னம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. கடைசி வரை படம் வெளியாகுமா? என்கிற சூழல் நிலவிய நிலையில், ரசிகர்கள் யாரும் பெரிதாக முதல் நாளில் படத்தை பார்க்க ஆர்வம் செலுத்தவில்லை.

20 சதவீதத்துக்கும் குறைவாகவே ரத்னம் FDFS காட்சிகள் நிரம்பியுள்ளன. சில ஊர்களில் படத்தை போட்டு விட்டு பாதியிலேயே நிறுத்திய கொடுமைகளும் நடந்துள்ளதாக கூறுகின்றனர். விஷால் அரசியலுக்கு வரப்போகிறேன் என அறிவித்த நிலையில், அவருக்கு பல முனையில் இருந்து பல பஞ்சாயத்துகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க: அஜித் இல்லனா மார்க் ஆண்டனி படமே இல்ல!.. சீக்ரெட்டை உடைத்த விஷால்!.. அட சொல்லவே இல்ல!..

ஹரி இயக்கத்தில் ஏற்கனவே தாமிரபரணி மற்றும் பூஜை படங்களில் விஷால் நடித்துள்ளார். 3வது முறையாக ஹரியுடன் கூட்டணி வைத்து ஹாட்ரிக் அடிக்கலாம் என நினைத்த விஷாலுக்கு அவர் கனவில் மண் விழுந்தது தான் மிச்சம் என்கிற நிலையில்  தான் ரத்னம் படம் உள்ளது.

டாக்டருக்கு படிக்க வேண்டும் என்கிற கனவில் படித்துக் கொண்டிருக்கும் மாணவியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அவரை தெலுங்கு நடிகர் முரளி ஷர்மாவின் ஆட்கள் போட்டு தள்ள திட்டமிடுகின்றனர். எம்.எல்.ஏ சமுத்திரகனியின் அடியாளான விஷால் பிரியா பவானி சங்கரை முரளி ஷர்மாவிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதை தான் 2.36 மணி நேர படமாக எடுத்துள்ளார் ஹரி.

இதையும் படிங்க: 15 நிமிஷம் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?!.. கமலோட மார்கெட் ஜெட் வேகத்துல ஏறுதே!….

ஆக்‌ஷன் காட்சிகளே ஒரு கட்டத்திற்கு மேல் ஓவர்டோஸாக மாறிவிடுகின்றன. ஆரம்பத்திலேயே விஷால் பிரியா பவானி சங்கரை எப்படியும் காப்பாற்றி விடுவார் என தெரிந்து விடும் நிலையில், படத்தின் மீதான சுவாரஸ்யம் குறைந்தே போய் விடுகிறது.

வழக்கம் போல பஞ்ச் வசனம், ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை, பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள், திடீரென ஒரு சென்டிமென்ட் என கலந்து கட்டி பக்காவான மசாலா படத்தை ஹரி கொடுத்துள்ளார். ஆனால், காமெடியாகவும் ரசிகர்களை பொழுது போக்கும் நோக்கிலும் படம் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு உருவாக்கப்பட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கும்.

இதையும் படிங்க: அவர் நடிகை எனக்கு ஒரு 5 நிமிஷம் போதும்… மாஸ் நடிகையை வளைத்து போட ப்ளான் போட்ட தளபதி…

ரத்னம் – காதுல ரத்தம்!

ரேட்டிங் – 2.75

author avatar
Saranya M
Continue Reading

More in Review

To Top