ஊருக்கே கறி விருந்து.. இத்தனை ஐட்டங்களா? மகளுக்காக தடபுடலாக உணவு ஏற்பாடு செய்து அசத்திய ரோபோ சங்கர்

by Rohini |
robo
X

robo

Actor Robo shankar: சமீபத்தில்தான் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் இனிதே நடைபெற்றது. மதுரையில் சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள்,உறவினர்கள், நண்பர்கள் சூழ இவர்களது திருமணம் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் ரோபோ சங்கர் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கிறார். பல முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்த ரோபோ சங்கர் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர்.

தன்னுடைய காமெடியான பேச்சாலும் நகைச்சுவையாலும் மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட ரோபோ சங்கர் வெள்ளித்திரையில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார். தற்போதும் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இதையும் படிங்க: குக் வித் கோமாளி பிரபலத்தினை காதலிக்கும் அம்மு அபிராமி… அதானே பாத்தோம்…

இவர் பிரியங்கா என்ற டான்ஸ் கலைஞரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். அதில் மூத்த மகள் இந்திரஜா. பிகில் திரைப்படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கிய இந்திரஜா அந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய முறை மாமனை சமீபத்தில்தான் திருமணம் செய்தார். அவரும் ஒரு இயக்குனர். இருவரின் திருமணமும் மதுரையில் நடைபெற திருமண வரவேற்பை சென்னையில் நடத்த ரோபோ சங்கர் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் தனது சொந்த ஊரான மதுரையில் தம்பதிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்திருந்தார் ரோபோ சங்கர்.

இதையும் படிங்க: நல்லா வெள்ள பனியாரம் மாதிரி கும்முன்னு இருக்கே!.. சுண்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!…

அவர்களோடு ஊருக்கே கறி விருந்தை வைத்திருக்கிறார். அதில் ஏகப்பட்ட வித்தியாசமான உணவு வகைகளும் அடங்கும். இந்தவிருந்தில் மட்டன் பிரியாணி, மட்டன் ப்ரை, மட்டன் சுக்கா, மீன் ப்ரை, சிக்கன் 65, குடல், கோலா உருண்டை, சிக்கன் குழம்பு, ஈரல் வறுவல் என சிக்கன் ஐட்டங்களை வைத்து அசத்தி இருக்கிறார். இதை பார்த்து அந்த ஊர் மக்கள் அதிசயித்து போயிருக்கிறார்கள்.

சென்னையில் திருமண வரவேற்பை மிகவும் கோலாகலமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார். அந்த வரவேற்பில் பல முன்னனி நடிகர்கள் கலந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிங்க: தக்க சமயத்தில் விஜே பிரியங்கா செய்த உதவி!.. பாலா வாழ்க்கையை மாற்றிய அந்த தருணம்…

Next Story