சரசரவென இறங்கிய சமந்தா சம்பளம்!.. ஒரு பாட்டுக்கு 5 கோடி வாங்கிய சமந்தா!.. இப்போ எவ்வளவு தெரியுமா?..

Published on: March 18, 2024
---Advertisement---

நடிகை சமந்தாவின் சம்பளம் அதிரடியாக சரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மயோசைடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்கள் சரியாக போகாத நிலையில், கடந்த 6 மாதங்களாக புதிதாக அவருக்கு எந்தவொரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

சினிமாவில் இருந்து ரெஸ்ட் எடுக்கப் போகிறேன் என சமந்தா சொன்னாலும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி மும்பையில் பல தயாரிப்பு கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி தான் வந்திருக்கிறார்.

இதையும் படிங்க: தொடர்ச்சியாக காணாமல் போகும் லைகா படத்தின் ஹார்ட்டிஸ்க்… அம்மணிய தப்பா பேசிட்டாங்களேயப்பா…!

ஆனால், முன்பு போல சமந்தாவை படங்களில் ஒப்பந்தம் செய்ய நடிகர்களும் தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை என்றே கூறுகின்றனர். பாதி படத்தின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டு இருக்கும் போது மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டால் என்ன ஆகும் என்பதால் தான் பிரபலங்கள் சமந்தாவுக்கு வாய்ப்புக் கொடுக்க மறுப்பதாக திரையுலகில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில், சமந்தாவை வைத்து இப்போ ஒரு ஐட்டம் சாங் எடுத்தால் அது பெரிய ஹிட் ஆகும் என நினைத்த அல்லு அர்ஜுன் ஒரு பாட்டுக்கு நடனமாட 5 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தார்.

இதையும் படிங்க: இப்பத்தான் சூப்பர்ஸ்டார்… ஆனால் முதலில் ரஜினிக்கு கொடுக்கப்பட்ட பட்டம் என்ன தெரியுமா?

ஆனால், தற்போது சமந்தா பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தனது சம்பளத்தை அதிரடியாக குறைத்துக் கொண்டார் எனக் கூறுகின்றனர். சினிமா படங்களில் நடிக்க 8 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த சமந்தா தற்போது 6 கோடி கொடுத்தாலும் நடிக்கிறேன் என்கிற லெவலுக்கு வந்து விட்டதாக கூறுகின்றனர்.

மேலும், சமீபத்தில் அவர் நடித்த ஐஸ் க்ரீம் விளம்பரத்துக்கு வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி உள்ளாராம். பொதுவாக நடிகைகள் விளம்பரப் படங்களில் அதிக சம்பளம் கேட்டு வாங்குவார்கள். ஆனால், சமந்தா சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதாக கூறுகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.