தளபதி, நாயகன் படத்தை விட பெரிய சாதனை செய்த படம் எதுனு தெரியுமா? இது தெரியாம போச்சே
Rajini Kamal: தமிழ் சினிமாவில் இருபெரும் ஆளுமைகளாக இருப்பவர்கள் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல். இருவருமே தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்துடன் இந்த சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்களாகவும் திகழ்ந்துவருகிறார்கள். 80களிலும் சரி 2000 களிலும் சரி இன்று வரை ரசிகர்களின் அபிமானங்களை பெற்ற நடிகர்களாகவே இருந்து வருகிறார்கள்.
விஜய், அஜித் என பெரிய மாஸ் நடிகர்கள் மற்றும் இவர்களுக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் என வரிசை கட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில் அவர்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் ரஜினியும் கமலும் அதே ஒரு மாஸை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர். இருவருமே 70 வயதை நெருங்கினாலும் 20 வயது நடிகர்களுடன் போட்டிப் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: உங்களை திட்டுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?!.. கேப்டன் விஜயகாந்த் சொன்ன கூல் பதில்!…
இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் இருவரின் படங்களும் தனித்தனியே பல முறை ஒன்றாக ஒரே நேரத்தில் மோதியிருக்கின்றன. அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு வெளியானதுதான் ரஜினியின் தளபதி படமும் கமலின் நாயகன் படமும். இரு படங்களுமே தாதாக்கள் கதையை மையப்படுத்தி அமைந்தவை,
இருபடங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள். இதுவரை இந்த இரு படங்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் நாம் சத்யராஜ் நடித்த பிரம்மா படத்தை பற்றி தெரியாமலேயே போய்விட்டது. பிரம்மா படமும் 1991 ஆம் ஆண்டு வெளியான படம்தான்.
இதையும் படிங்க: பாக்கியா வீட்ல விசேஷங்க… இப்டியா காப்பி அடிப்பீங்க… ஈஸ்வரி என்ன சொல்லுவாங்களோ!
தளபதி, நாயகன் வெளியான அதே நேரத்தில்தான் பிரம்மாவும் வெளியானதாம். ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் தளபதி, நாயகன் படத்தை விட சத்யராஜ் நடித்த பிரம்மா படம்தான் வசூலில் அதிக வெற்றிப் பெற்ற திரைப்படம் என சித்ரா லட்சுமணன் கூறினார்.