More
Read more!
Categories: Cinema News latest news

பனிமலையில் நீச்சல் உடையில் ஐஸ் குளியல் போட்ட ஜோதிகா!.. சூர்யாவுடன் செம ரொமான்ஸ் வேற!..

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் கவர்ச்சியாக நடித்து வந்த நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், மீண்டும் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் மலையாள நடிகர் மம்மூட்டியுடன் ஓரினச்சேர்க்கையாளர் கதையில் போல்டாக நடித்த மிரட்டி இருந்தார். ஜோ பேபி இயக்கத்தில் வெளியான காதல் தி கோர் திரைப்படம் ஜோதிகாவுக்கு பல புதிய படங்களின் வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்பியுள்ள ஜோதிகா அஜய் தேவ்கன் மற்றும் மாதவனுடன் இணைந்து நடித்த சைத்தான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ப்ளூ சட்டை மாறன் உடம்புக்குள்ள புகுந்த விஜய் அப்பாவோட ஆவி!.. அடேய் எல்லை மீறி போறிங்கடா!..

இந்நிலையில் சமீபத்தில் தனது கணவர் சூர்யாவுடன் பின்லாந்துக்கு புத்தாண்டு விடுமுறையை கொண்டாட சென்ற நிலையில் அங்கிருந்து எடுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடும் பனிப்பொழிவில் குழந்தைகள் இன்றி ஜோதிகா மற்றும் சூர்யா மட்டும் கொண்டாடிய வீடியோ காட்சிகள் ரசிகர்களை வாவ் போட வைத்துள்ளது.

அதிலும் அந்த குளிரில் நடிகை ஜோதிகா நீச்சல் உடையில் குளிக்கும் காட்சியை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஸ்தம்பித்து போய்விட்டனர். கங்குவா படத்தின் லுக்கில் இருக்கும் சூர்யா தனது மனைவியுடன் பின்லாந்தில் படு ரொமான்டிக்கான நியூ இயர் இந்த ஆண்டு கொண்டாடியுள்ளார். ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளுக்கு சென்று வரும் சூர்யா வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

இதையும் படிங்க: கிளாசிக் லுக்கில் அஜித்!. இப்படி கேப்பு விடாம அடிச்சா எப்படி?!.. நடிகர் எடுத்த வைரல் போட்டோ!..

எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்கில் வெளியான நிலையிலும் பெரிதாக ஹிட் அடிக்காத நிலையில் கங்குவா படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என்ன ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

Published by
Saranya M

Recent Posts