தளபதி விஜய் வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கி அந்த மூன்று படங்களையும் மாபெரும் வசூல் செய்த திரைப்படங்களாக மாற்றிய கமர்ஷியல் கிங் இயக்குனர் என்றால் அது தற்போதைக்கு அட்லீ தான். தளபதி விஜய்யின் மார்க்கெட்டை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றதில் முக்கிய இடம் இயக்குனர் அட்லிக்கு நிச்சயம் உண்டு.
அதன் பயனை தான் தற்போது இயக்குனர் அட்லி அனுபவித்து வருகிறார். அவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் படியுங்களேன்…. சிவகார்த்திகேயனை உதறி தள்ளிய இளம் இயக்குனர்.! முழு காரணம் சிம்பு மட்டும் தான்.!
ஷாருக்கான் திரைப்படம் நிச்சயம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல அட்லி அடுத்து அடுத்து இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் நிச்சயம் தான் பான் இந்தியா திரைப்படமாக பல மொழிகளில் தான் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்ததாக இயக்குனர் அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து படமெடுக்க உள்ளதாகவும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இந்த படமும் நிச்சயம் பான் இந்தியா திரைப்படமாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.