அரசியலுக்கு போன விஜய்!.. விஜய் சேதுபதி மகன் படத்துக்கு வந்த சிக்கல்!.. அட பாவமே!...

#image_title
Phoenix: ஒரு படத்திற்கு பல விஷயங்கள் பிரச்சனையாக வரும். எந்த ரூபத்தில் எப்படி சிக்கல் வரும் என சொல்லவே முடியாது. பெரும்பாலும் பணம் தொடர்பான பிரச்சனைகளை பிரதானமாக இருக்கும். படத்தை உருவாக்க வாங்கிய கடனை தயாரிப்பாளர் கொடுக்காமல் இருப்பார். எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள். இதுதான் அடிக்கடி நடக்கும்.
கங்குவா: கங்குவா படத்திற்கு கூட இது நடந்திருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் வாங்கிய 55 கோடி கடனை கொடுக்காமல் இருந்தார். எனவே, நீதிமன்ற்த்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த தொகையை சம்பந்தப்பட்டவருக்கு ஞானவேல் கொடுத்துவிட்டார். இது பல திரைப்படங்களுக்கும் நடக்கும்.
இதையும் படிங்க: Vidamuyarchi: குட் பேட் அக்லி படத்துக்கே ஆப்பா?… நல்லா போடுறாங்க ஸ்கெட்ச்!.. எல்லாம் அஜித் கையில இருக்கு!..
பீனிக்ஸ்: ஆனால், விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்துள்ள ஃபீனிக்ஸ் படத்திற்கு நடிகர் விஜய் துவங்கியுள்ள அரசியல் கட்சி மூலம் சிக்கல் வந்திருக்கிறது. விஜய் சேதுபதி மகன் சூர்யா சிறுவனாக இருக்கும்போதே நானும் ரவுடி, சிந்துபாத் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் இவருக்கு ஹீரோ வாய்ப்பும் வந்தது.
பேட்டிகளில் ‘நான் வேற.. என் அப்பா வேற’ என அவர் கொடுத்த பேட்டியால் ட்ரோலில் சிக்கினார். அதேபோல், என் அப்பா தினமும் எனக்கு 500 ரூபாய் மட்டுமே செலவுக்கு கொடுப்பார். அதனால்தான் நானும் சம்பாதிக்க சினிமாவுக்கு வந்தேன் என அவர் சொல்ல அதுவும் ட்ரோலில் சிக்கியது.

#image_title
தற்போது பீனிக்ஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனல் அரசு இயக்கி வருகிறார். இவர் பல திரைப்படங்களில் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிந்தவர். எனவே, பீனிக்ஸ் படமும் அனல் பறக்கும் ஒரு ஆக்சன் படமாக உருவாகியிருக்கிறது. இந்த படம் வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்: இந்த படம் அரசியல் தொடர்பானது. சில காட்சியில் ஒரு அரசியல் கட்சி கொடி காட்டப்படுகிறது. அதற்காக இயக்குனரே கற்பனையாக ஒரு சில நிறங்களை கலந்து ஒரு கொடியை உருவாக்கி பல இடங்களிலும் அது காட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அந்த கொடி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை போலவே இருப்பதாக சொல்லி சென்சாரில் அதை மாற்ற சொல்லி இருக்கிறார்கள். எனவே, கிராபிக்ஸ் மூலம் படத்தில் காட்டப்படும் கொடிகளின் நிறத்தை மாற்றி வருகிறார்களாம்.
இப்படியெல்லாம் பிரச்சனை வரும் என இயக்குனரே எதிர்பார்த்திருக்க மாட்டார்!...
இதையும் படிங்க: அமரன் பட நாயகி சாய்பல்லவிக்கு தேசியவிருதா? பிரபலம் சொல்றது இதுதான்..!